உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XXX

மறைமலையம் – 12

கம்பர் சோழன் மகளுக்கு ஆசானாக விளங்கியவர். அவர் வெளிச் செலவால் தக்க ஆசானாக அவர் மகன் அம்பிகாபதியை அமர்த்தல். அவன் இளமையும் எழிலும் புலமையும், அமராவதி எழிலும் இளமையும் கலை ஆர்வமும் சிக்கலாக்கி விடக் கூடாதென்று, கற்பிப்பவர் தில்லைவாணர்

எனப்

பயர்

மாற்றியும், பார்வையிலார் எனப் பகர்ந்தும், அமராவதி கையும் காலும் விளங்கா முடமும் அழகின்மையும் கொண்டவள் எனக் கூறியும் திரையிட்டிருந்து பாடம் சொல்லவும் கேட்கவும் ஏற்பாடு செய்யவும் பயிற்சி தொடர்ந்தது.

-

புறப்பாடல் பாடம் நடத்தும் போது முழுமதித் தோற்றம் பற்றிய செய்தியைச் சுட்டிக் காட்டிய அளவில் கற்பிக்கும் அம்பிகாபதிக்குப் பார்வை இல்லையேல் சுட்ட முடியாதே என ஐயுற்று விலக்கி நோக்க ஈரெழில் இளமை உளங்களும் ஒன்றாகி விடுகின்றன.

தொடக்க முதல் கட்டுக் காவல் மிக்கிருந்தும் காதல் வெள்ளக் கரைகடப்பைத் தடுக்க மாட்டா தொழியப் பல்வகை உத்திகளும் உதவுகின்றன.

கம்பர் அரங்கேற்றம் முடித்து வர, மீள அவரே ஆசானாம் பொறுப்புக் கொண்டும் - காதல் தொடரவே செய்தது.

அமைச்சன் மகன்

கம்பர் மகள் மகள் காவேரி என்பாள்; அமைச்சன் அவள்மேல் காதல் உடையான். காவேரியும் அம்பிகாபதியும் உடையாலேதான் ஆண் பெண் எனக் காணலாம் ஒப்பியல் தோற்றம்! அத்தோற்றம் காதல் உருமாற்ற உயர்துணையாய் அமைகின்றது!

பலநாள் கனவு ஒருநாள் புலப்படல் உண்மைபோல் வெளிப்பட அதன் விளைவுக் கொடுமையை எண்ணிச் சூழ்ச்சியால் கம்பர், அம்பிகாபதி காவேரி, அமராபதி, ஆரும் அறியா வகையில் திட்டப்படுத்தி புல்லி ஆண்ட வேங்கடம் கடந்து ஓரங்கல் நாடு செல்லுதல்!

-

ஓரங்கல் நாட்டரசன் பிரதாப ருத்திரன் அரவணைப்பால் வாழ, அவனே மணவினையை அம்பிகாபதி அமராபதிக்கு முடித்து வைத்து அவன் நாட்டிலேயே வாழ வைக்க எண்ணிய போது, கூத்தரும் சோழனும் சூழ்ச்சியால் ஓலை விடுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/31&oldid=1580556" இலிருந்து மீள்விக்கப்பட்டது