உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகம்

xxxi

அவர்களுக்குச் சோழ நாட்டிலேயே சிறப்ப மணம் செய்யவிருப்ப தாகக் காட்ட, கம்பர் முதலோர் வருதல்.

பேரின்பப் பொருளதாய் - சிற்றின்பம் சிறிதும் கலவாததாய் நூறு பாடல் பாடின், அம்பிகாபதி அமரவாதி திருமணம் நிகழுமெனக் கூற அவ்வாறே அவையில்பாட, கடவுள் வாழ்த்தொடும் எண்ணி 99 ஆம் பாடல் வரவும் 100 எனக் கணக்கிட்டு அமராவதி தோற்றமுற அம்பிகாபதி,

“சற்றே பருத்த தனமே குலுங்கத் தரளவடம்

துற்றே அசையக் குழையூச லாடத் துவர் கொள் செவ்வாய் நற்றேன் ஒழுக நடன சிங்கார நடையழகின் பொற்றேர் இருக்கத் தலையலங் காரம் புறப்பட்டதே”

எனச் சிற்றின்பப் பாடல் பாட - அதுவே அவன் தலை துண்டாக்க, அமராவதி ஆற்றொணா தோடி அவனொடு முடிய, காவேரியை சோழன் மகன் காவு வாங்க, சோழன் கம்பனை அம்பால் சாவடிக்க பிரதாப உருத்திரன் சோழனை வீழ்த்த பேரவல முடிவாய் முடிகின்றது.

காண்டு

சுவைமிகப்

புலவர் மூவரும் ஒருகாலத்தரல்லர் என்பது வரலாறு. புனைவுகள் தனிப்பாடல்கள் புனையப்பட்டது இது. அடிகளார்

புனைவுத்திறம் எடுத்த நூலை விடாது படித்து முடிக்க வைப்பது. இடைஇடையே அடிகளார் அறவுரையும், சிவனியப் பற்றுமையும் பளிச்சிடுகின்றன.

இரா. இளங்குமரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/32&oldid=1580561" இலிருந்து மீள்விக்கப்பட்டது