உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

❖ LDMMLDMOED -12 →

ஆறுமுகநாவலர் பிறந்திலரேல் சொல்லுதமிழ் என்கே. சுருதி எங்கே, எல்லவரும் ஏற்றும் புராண ஆகமங்கள் எங்கே, பிரசங்கம் எங்கே, ஆத்தன் அறிவெங்கே அறையென அரற்றினார். யாமும் அக்கூற்றினை சிறிது மாற்றி மறைமலையடிகள் பிறந்திலரேல் மாண்புமிகு தனித்தமிழ் எங்கே. சுவைமிகு சொற்பொழிவெங்கே எல்லவரும் ஏற்றும் ஆய்வுத்திறன் மிக்க அறிவு நூல்கள் எங்கே, சிவநெறியின் சிறப்பெல்லாம் எங்கே என்று எம்மையே யாம் கேட்கும் நிலை உருவாகியிருக்கும். எம் இனத்தின் வாட்டத்தைப் போக்கி எம்மொழியின் வறட்சியை மாற்றி எம் நெறியிலே புகுந்த நெறியிலா நெறிகளை நீக்கி எம்மை வாழ்வித்து வளம்பல தந்த மறைமலை வள்ளலாரை வாயார வாழ்த்தி நெஞ்சிலே நிறுத்தி நிலமிசை அவர்புகழ் நீடூழி வாழ வழி காண்போமாக. அதுவே மறைந்தும் மறையாத மறைமலை யடிகளார்க்கும் யாம் காட்டும் நன்றிமறவாத நற்பண்பு.

வாழ்க மறையடிகள் புகழ்!

– ஈழவேந்தன் சுதந்திரன் வெளியீடு

கொழும்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/309&oldid=1581242" இலிருந்து மீள்விக்கப்பட்டது