உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு

275

விளங்குகிறதென்று கூறிய கூற்று மறைமலை யடிகளாரின் நூலகத்தின் பெருமையைப் பாரெங்கும் பறைசாற்ற போதிய சான்றாக அமைகிறது. அண்மையில் மறைமலையடிகள் நூல்கள் அனைத்தும் சென்னையில் தோற்றுவிக்கப்பட்டு மறைமலையடிகள் லயடிகள் நூல் நிலையத்தில் சேகரிக்கப்பட்டு பொதுமக்கள் தேவைக்குப் பயன்படுத்தப் பட்டு வருகிறது. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் அதனின் மேற்பார்வையாளராக விளங்கி மேன்மைமிகு பணியாற்றி வருகிறது. இந்நூல் நிலையம் இன்று சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமரா பொது நூலகத்திற்கு மாற்றப்ட்டடு மக்கள பயன்படுத்தும் நூலகமாக இயங்கி வருகிறது.

தோற்றப் பொலிவு

சிறந்த சிந்தனையாளராய், சொல்லேர் உழவராய், சொல்மாரி பொழிந்த சொற்பொழிவாளராய், சீர்திருத்தச் செம்மலாய் விளங்கிய மறைமலையடிகள் தோற்றப் பொலிவிலும் கவர்ச்சி மிகவுடையவராய் காட்சியளித்தார் மெல்லிய செந்நிற மேனியும், அதனை மூடியிருந்த காவி யுடையும், தன்னைப் பார்க்க வருவோரை கூர்ந்து கவனிக்கும் கூர்மையான பார்வையும், மெல்லிய புன்னகையும் அவரின் உடல் உறுப்புகளில் சிறிய அசைவும் அவரின் பண்பட்ட அறிவின் நிறைவையும், பற்றற்றான் பற்றினை பற்றி நின்ற பாங்கினையும் எடுத்துக் காட்டின. இச்சிறப்பியல்புகளை எண்ணும்போது இயற்கை அன்னை மறைமலையடி களிடத்தில் தனி அன்பை அள்ளிச் சொரிந்தாள் என்று கூறினால் அதனை மிக்கற்றென ஒதுக்க முடியாது.

நாவலர் - மறைமலையடிகள்

சுருங்கக்கூறின் தன்நலம் கருதாது தமிழர் நலமே தம்நலமாய்க் கருதி தன் சிந்தனை, எழுத்து, பேச்சு, செயல் அதனைத்தையும் தமிழ் மயமாக்கி தமிழ் மலையாய் தமிழ் அறிஞர் தம் தலைவராய் ஒளிவிட்டு விளங்கியவர் மறைமலையடிகளார் என்று கூறலாம். ஆறுமுகநாவலர் மறைந்தபோது தண்டமிழ் தாமோதரனார் நல்லைநகர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/308&oldid=1581241" இலிருந்து மீள்விக்கப்பட்டது