உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

மறைமலையம் 12

என்ற அடிகளாரின் நூல் அடிகளின் உயர்ந்த உள்ளத்தை உலகிற்கு எடுத்து உணர்த்தி நிற்கிறது. இந் நூலினை நுகர்வோர் உள்ளத்தில் புரட்சி பூப்பது உறுதி.

தமிழ் வழிபாடு

சமயத்துறையில் அடிகள் செய்த மற்றைய புரட்சி எம் கோயில்களில் தமிழ் வழிபாட்டை நடைமுறைக்கு கொண்டுவரச் செய்ததே. பொருள்விளங்கா மொழியில் கடவுளை வழிபடுவதை அவர் விரும்பவில்லை. மாறாக அதை வெறுத்தார். தெற்கோதும் தேவாரம் திருவாசகம், திருவாய் மொழி எம் ஊனிணை உருக்கி உள்ளொளி பெருக்க உதவும் போது வேற்றுமொழி எதற்கு என்பது அவர் கேள்வி, குருடும் குருடும் குருடாட்டம் ஆடி குழி விழும் நிலையை மாற்றி சால்லியபாட்டின் பொருள் உணர்ந்து பாடினாற்ற அம்பலவாணர் அருள் கிட்டும் என்பது அவரின் அசைக்க முடியாத நம்பிக்கை. அவரின் இக் கொள்கையின் விரிவை அவரின் நூல்களிற் கண்டு கொள்க. இன்று தமிழ்நாட்டுக் கோயில்கள் பலவற்றில் தமிழில் வழிபாடு செய்யும் முறைக்கு வழிகோலிய பெருமை மறைமலைய டிகளார்க்கே உரிய தென்பதை யாம் மறப்பதற்கில்லை.

நடமாடும் நூல் நிலையம் தோற்றுவித்த நிலையான நூல் நிலையம்

ன்

நடமாடும் நூல்நிலையமாய் விளங்கிய அடிகளார் பல்லாயிரம் பெறுமதியான பல்லாயிரம் நூல்களை தனது நூலகத்தில் சேர்த்து வைத்திருந்தார். அருந்தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழிகளில் அமைந்த அந்நூல்களை அவர் நுகர்ந்த முறையும் அவற்றை அட்டையிட்டு அழகுற அடுக்கி வைத்த தன்மையையும் கண்ட கற்றறிந்த நல்லறிஞர் வியந்து பாராட்டி அவை நல்கிய நல்விருந்தை சுவைத்து மகிழ்ந்தனர். நூலகத் துறையில் தனிச் சிறப்புப் பட்டங்கள் பெற்ற அறிஞர் அரங்கநாதன் அவர்கள் இந்திய துணைக் கண்டத்தில் தனியார் முயற்சியில் உருவாக்கப்பட்ட நூல்களுள் மறைமலை யடிகள்

உருவாக்கிய நூல்நிலையம் தலைசிறந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/307&oldid=1581240" இலிருந்து மீள்விக்கப்பட்டது