உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு

273

அறிவுக் கண்கொண்டு ஆராய்ந்து கொள்வன கொண்டு தள்ளுவன தள்ளுமாறு வேண்டினார். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் எப்பொருள் எத்தன்மையாயினும் அப்பொருளின் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதைப் பலதடவை வலியுறுத்தினார். பெண்கள் புதுமையின் பேரில் தம் பெண்மை நலத்தை இழப்பதை விரும்பாத அடிகள் அவர்கள் அறியாமையில் அழுந்தியிருப்பதைக் கண்டு அவர்கள் அறியாமையை நீக்க அரும்பாடுபட்டார். தாய்மார்களிடம் நிறைந்த கல்வி கேள்விச் செல்வமும் சமய உணர்ச்சியும் இருந்தாற்றான் வருங்காலத் தமிழகம் வளமாக வாழ முடியுமென்பதை நம்பி உரைகள் பல நிகழ்த்தி கட்டுரைகள் பல எழுதினார். இந்தியத் துணைக்கண்டம் உழவுத் தொழிலிலும் கைத்தொழிலிலும் நாட்டம் காட்டினாற்றான் நாடு நலம்பெறும் என்பதை பல இடங்களில் வற்புறுத்தியுள்ளார். அவர் யாத்த அறிவுரைக் கொத்து என்ற நூலில் உள்ள கல்வியும், கைத்தொழிலும், தமிழ் நாட்டவரும் மேல்நாட்டவரும், பகுத்துணர்வும் மாதரும், ஆகிய கட்டுரைகள் அவரின் பல்துறைப்பட்ட அறிவை சீர்திருத்த நோக்கை இனிது எடுத்துக்காட்டுகின்றன.

சமயச் சீர்திருத்தம்

மறைமலையடிகள் ஆழ்ந்த சமயப்பற்றுள்ளவர், அடிகள் என்ற அடைமொழியே அதற்கு எடுத்துக்காட்டு. அவரின் நூல்கள் பலவற்றில் இறைஉணர்ச்சி ததும்பி வழிவதைக் காணலாம். இவ்விதம் சமயப்பற்றில் ஊறிய அடிகளார் வெறும் சமயச் சடங்குகளில் நம்பிக்கையற்றவர். நெஞ்சம் நெகிழ்ந்துருகி இறையருளை வேண்டி நின்ற அடிகளார் வீண்சடங்குகளில் எம் நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்வதை விரும்பவில்லை. சிறு தெய்வங்களுக்கு உயிர்ப்பலியிடும் கொடுமையை மிக வன்மையாக ஒறுத்தார். சமயத்தின் பேரில் எழுந்த சாதிச் சண்டைகளுக்கு நல்ல சாட்டையடி கொடுத்தார். "சாத்திரம் பல பேசும் சழுக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்” என்று நவின்ற நாவுக்கரசரின் உள்ளத்தையே அடிகளும் ஏற்றிருந்தார். சாதி வேற்றுமையும் போலிச் சைவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/306&oldid=1581239" இலிருந்து மீள்விக்கப்பட்டது