உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

மறைமலையம் 12

பேர் எடுத்த பலர் மக்கள் மனம் கவரும் முறையில் பேச முடியாது மூலையில் முடங்கிக் கிடக்கின்றனர். ஆனால் நம் மறைமலையடிகளாரோ புரட்சி மிகு சிந்தனையாளராக விளங்கியதோடு, புலமை நலமிக்க எழுத்தாளராக மிளிர்ந்தார். அருந்தமிழிலும், ஆங்கிலத்திலும் அவர் ஆக்கி அளித்த அறிவுக் களஞ்சியங்கள் எம் கூற்றினை மறைமலையடிகளார் தமிழ் நாட்டில் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவராய்த் துலங்கினார். குழலோசை

லோசையென ஐயுறும் முறையில் குயிலிலுமினிய மென்குரலால் அவர் நிகழ்த்திய ஆய்வுத் திறன் மிக்க பேருரைகளைக் கேட்டு பெருமிதமும் பேருவகையும் எய்திய தமிழ் மக்கள் எண்ணற்றோர். தம் மாற்றாரோடு மாறுபட்டு தன் கருத்தினை தக்க சான்றுகளோடு அவர் விளக்கும் போமு செவி மமுத்துக் கொண்டிருந்த மக்கள் பலர் “வென்றது தமிழ்" என்று பலதடவை எழுப்பிய குரலை யாம் மறக்க முயன்றாலும் மறக்க முடியாது. இதனாற்றான் ஒரு தமிழ்ப் பாவலர்,

“உடல் குளிர உயிர் தழைக்க உணர்ச்சி ஓங்க

உளங்கனிய மெய்யன்பர் உள்ளத் தூடே

கடலனைய பேரின்பந் துளும்பச் செய்யும்"

பேச்சாளர் என அவரை வாழ்த்திச் சென்றார். பிறிதோர் சொல்லை வெல்லும் பயனுள்ள சொல்லை, கேட்போர் பிணிக்க கேளாதாரும் வேட்பமுறும் முறையில் பேசும் சோர்வில்லாத சொல் வல்லராக அவர் விளங்கியதால் தமிழகம் அவர் சொற் கேட்டு விரைந்து பணியாற்றத் துடித்தது

சமூகச் சீர்திருத்தம்

மறைமலையடிகள் வெறும் மொழித்தொண்டுடனோ அல்லது இலக்கியப் பணியுடனோ நிறைவடைந்தார் என்று கூறமுடியாது. அவர் சமூக, சமயத்துறைகளில் ஏற்படுத்திய புரட்சி அவரை ஒரு சீர்திருத்தச் செம்மல் என்ற நிலைக்கு உயர்த்துகிறது. எம்முன்னோர் செயல் என்பதற்காக மட்டும் எதையும் அப்படியே பின்பற்றும் மூட நம்பிக்கையை மக்களிடம் இருந்து களையச் செய்தார். அனைத்தையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/305&oldid=1581238" இலிருந்து மீள்விக்கப்பட்டது