உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு

271

எனப் பெயர் பெற்ற இராசாசி அவர்கள் 1937-இல் இந்தியை தென்நாட்டில் திணிப்பதற்கு உடந்தையாக இருந்தவர்களில் ஒருவர். அதே இராசாசி ஏறக்குறைய இருபது ஆண்டுகள் கழித்து 1957-இல் ஏறக்குறைய மறைமலையடிகளார் எடுத்தாண்ட காரணங்களையே எடுத்து இயம்பி இந்தியை எதிர்த்து இந்திய அரசியல் வானில் பெரும்புயலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அரசியலில் இருந்து பெருமளவு

-

ஒதுங்கி மொழியியல் துறையில் மட்டும் ஈடுபட்ட

மறைமலையடிகளுக்கு இருந்த முன்கூட்டி உணர்கின்ற அறிவு (தீர்க்க தரிசனம்) அரசியலிலே தோய்ந்திருந்த இராசாசிக்கு 1957-ல் தான் ஏற்பட்டது அந்தளவிலாவது அவரின் அறிவில் தெளிவு ஏற்பட்டது தென்னகத்திற்கு நன்மை அளித்துள்ளது என்று கூறி அமைதியுறுவோமாக.

மறைமலையடிகளின் நூல்களின் நலன் பற்றி தொகுத்து ஆராயும்போது திரு. எம். எஸ் பூரணல்லிங்கம் அவர்களின் பின்வரும் கூற்றே எம் நினைவலைகளில் மோதுகிறது. “His books are sure to set a thousand minds a thinking, ten thousamd tongues a talking and atleast a century of able pens a writing.” எம். என். அவரின் நூல்கள் ஆயிரம் மூளைகளைச் சிந்திக்கச் செய்யும், பத்தாயிரம் நாக்குகளைப் பேசச் செய்யும். அத்தோடு ஒரு நூற்றாண்டு காலத்திகாகுதல் ஆற்றல் மிக்க எழுத்தாளரை எழுதச் செய்யும். மறைமலை யடிகளின் நூல்களை நுகரவேண்டிய முறையில் நுகர்வோர் இவ்வுண்மையை உணர்ந்தேயாவர்.

எம். என். பூரணலிங்கம்

பேருரைகள் நிகழ்த்தும் பேராற்றல்

சிந்தனைச் சிறப்பும் எழுதும் ஆற்றலும், பேசும் திறனும் ஒருங்கே கொண்டு உலகில் திகழ்ந்தவர்கள் - திகழ்பவர்கள் மிகச் சிலரே. சிந்தனைத் திறன் படைத்த பலர் ஏற்றமுற எழுதவும் பேசவும் முடியாத நிலையில் உள்ளனர். பேசும் திறன் படைத்த பலர் எழுத்திலே ஏமாற்றம் காண்கிறார்கள். எழுத்தாளர் எனப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/304&oldid=1581237" இலிருந்து மீள்விக்கப்பட்டது