உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

நாடகம்

❖ ❖ மறைமலையம் -12

சாகுந்தல நாடகமும்; சாகுந்தல நாடக ஆராய்ச்சியும், அவர் எம் தமிழ் நாடக இலக்கியத்திற்கு அளித்த அரும் களஞ்சியங்கள். இவ்விரு நூல்களிலும் காளிதாசரின் நிறைவை குறைவை, காய்தல் உவத்தல் அகற்றி துணிவோடு ஆராயும் முறையும் நாடக இலக்கணங்கள் பற்றி எடுத்துக் கூறும் விளக்கங்களும் அறிஞர் உலகிற்கு நல்விருந்து. அடிகளின் மும்மொழிப் புலமைக்கு மணிமுடி வைத்தது போல் இந்நூல்கள் விளங்குகின்றன. காஞ்சி காமகோடியாரின் கருத்தினை, அடிகளின் இவ்விரு நூல்கள் கவர்ந்துள்ளன என்பது ஈண்டு குறிப்பிடத் தக்கது. “நாடகம் என்பது ஒரு புல்லின்மேல் நின்ற பனித்துளி தன்னைச் சூழ்ந்துள்ள ற இயற்கைப் பொருட்களை தன்னகத்தே அடக்கிக் காட்டுவதைப் போன்றது எனலாம்" என்ற நாடகம் பற்றி ஓர் இடத்தில் அடிகள் நவிலும் கருத்து நயம் மிக்க கருத்தாகும்.

இந்தி பொது மொழியா

1937-இல் தென்னகத்தில் இந்தி கட்டாய மொழியாகத் திணிக்கப்பட்டபோது மறைமலையடிகள் போர்க்குரல் எழுப்பினார். வழக்காற்றில் இல்லாத சமய மொழியாக மட்டும் வந்த வடமொழியே தமிழ் மொழியின் வளத்தை வாழ்வை பெருமளவு குன்றச் செய்த போது ஆட்சி மொழியாக வரும் இந்தி தமிழ் மொழியை எவ்வளவு தூரம் மாசுபடுத்தும் அழிவுறுத்தும் எனக்கூறி தமிழ் மக்களை பேரணியாகத் திரட்டினார். அவர் தலைமையில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாடு தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஓர் நிகழ்ச்சி என்பதை யாம் நினைவில் கொள்ளல் நலம். வெறும் பேச்சுக்களுடன் நிறைவடையாத இந்தி பொது மொழியா' என்ற சிந்தனைச் செறிவுமிக்க சிறு நூலினை பல்லாயிரக் கணக்கில் வெளியிட்டுப் பரப்பி மக்களுக்கு அறிவினை ஊட்டியதோடு மக்களை உரிமை வேட்கை உடையவர்களாகவும் விளங்கச் செய்தார்; அவரின் குடும்பமே இந்தியை எதிர்த்து சிறை சென்றது என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. அரசியல் நுண்ணறிவில் ஒரு சாணக்கியர்

மறைமலையடிகளார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/303&oldid=1581236" இலிருந்து மீள்விக்கப்பட்டது