உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பின்னிணைப்பு

269

எடுத்துக் காட்டுகின்றன. வரலாற்று நூல் வரைவோர்க்கு இந்நூல்கள் நல்ல வழிகாட்டிகளாய் விளங்குகின்ற.ன.

அறிவியல் நூல்கள்

அறிவியல் துறையில் அடிகளார் ஆக்கம் காண விழைந்தார் என்பதற்கு அவரின் மக்கள் நூற்றாண்டு உயிர் வாழ்க்கை பொருந்தும் உணவும் பொருந்தா உணவும், மனோவசியம் அல்லது மனக்கவர்ச்சி, இறந்த பின் இருக்கும் நிலை, அறிதுயில் (யோக நித்திரை), தொலைவில் உணர்தல் ஆகிய நூல்கள் சான்றாய் அமையும். மக்கள் தங்கள் உடலையும், உயிரையும் ஓம்பி உயர் வாழ்வு வாழவேண்டும் என்பது அடிகளாரின் விடுதல் அறியா விருப்பு. தன்விருப் பினை தமிழ் மக்களுக்கு பயன்படுத்தும் முறையில் அரிய ஆங்கிலச் சொற்களை அருந்தமிழில் ஆக்கி இந்நூல்களை படைத்த அடிகளாரின் பெருமை சொல்லுதற்கரியது.

புதினம் (நாவல்)

L

புதினம் அல்லது நாவல் தமிழுக்குப் புதியது. அந்தப் புதுத்துறையில் இறங்கி தமிழை வளப்படுத்தியவர் அடிகளார், அன்னவரின் “கோகிலாம்பாள் கடிதங்கள்” தலைசிறந்த புதின நூல் - கடிதங்கள் வாயிலாக கதையை நடத்திச் செல்கிறார் ஆசிரியர். கதைத் தலைவி எழுதும் பதினேழு காதற் கடிதங்களில் நூல் முடிவடைகின்றது. பல சீர்திருத்தக் கருத்துக்களை இந்நூல் தன்னுள் அடக்கியுள்ளது. குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி என்ற அவரின் மற்றைய நூல் ஆங்கில மூலத்தின் தழுவல் எனினும் சுவை ததும்ப தமிழில் வரையப்பட்ட புதின நூல். இவ்விடத்தில் புதினம் (நாவல்) பற்றி மறைமலையடிகளார் கூறும் கருத்து இன்பமும் பயனும் தருவதாகும். இதோ அவர் செப்பும் செம்மொழி "நாவல் எதைப்போன்ற தெனின் மிக அகன்றதோர் அழகிய ஏரிநீர் தனக்கு மேலே பரந்து நிற்கும் நீலவானில் விளங்கும் தண்ணொளி தரும் திங்களையும் அதைச் சூழ்ந்து விளங்கும் மீன்களையும் காட்டுவதைப் போன்றது. இவரின் இவ்விளக்கம் ஆங்கில நலன் ஆய்வாளர் பலரையும் இவர் மிஞ்சிவிட்டார் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/302&oldid=1581235" இலிருந்து மீள்விக்கப்பட்டது