உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

❖ LDM MLDM-12 →

பிற்காலத் தமிழ்ப் புலவோர் முதலிய நூல்கள் அன்னவரின் சங்க இலக்கிய ஈடுபாட்டையும் சங்கச் சான்றோர் பிற்காலப் புலவர்களிலும் பார்க்கப் புலமையிலும் இயற்கையோடு ஒட்டிய கற்பனை வளத்திலும் சிறந்து விளங்குகிறார்கள் என்ற அன்னவரின் கருத்தினை வலியுறத்தி நிற்கின்றன.

கட்டுரை நூல்கள்

""

அடிகள் சிறுவர்களின் உள்ளவளர்ச்சியை நினைவிற் கொண்டு கவின்மிகு முறையில் கட்டுரைகள் எழுதும் ஆற்றல் உடையவர் என்பதை அவரின் “சிறுவர்க்கான செந்தமிழ், இளைஞர்க்கான இன்தமிழ், அறிவுரைக் கொத்து, முதலிய நூல்கள் உணர்த்தி நிற்கின்றன. அடிகளின் “சிந்தனைக் கட்டுரைகள்" என்ற இந்நூல்கள் அடிசனின் (ஹனனளைடி)ே அருமைமிகு ஆங்கிலக் கட்டுரைகளைச் சுவைகுன்றாது தமிழில் மொழி பெயர்க்கும் அவரின் இருமொழிப் புலமையைப் புலப்படுத்தி நிற்கின்றது.

செய்யுள் நூல்கள்

அடிகளின் திருவொற்றி முருகன், மும்மணிக்கோவை உரை, சோமசுந்தர காஞ்சியாக்கம் ஆகிய நூல்கள் சங்கச் சான்றோர்போல் விழுமிய நடையில் சொற்சுருக்கத்துடன் பொருட் பொலிவோடு செய்யுள் யாக்கம் ஆற்றலை அடிகளார் பெற்றிருந்தார் என்பதை இனிது எடுத்துக் காட்டுகின்றன. தன் தீராத நோய் தீர்த்த முருகன் புகழை முன்னைய நூல்பாட, பின்னைய நூல் அவருக்கு அறிவூட்டிதன் ஆசிரியரின் அரும் பண்புகளை எடுத்து இயம்புகிறது. இரண்டும் அடிகளின் நன்றி உணர்ச்சிக்கு நல்ல எடுத்துக்காட்டு.

வரலாற்று நூல்கள்

வரலாற்றுத் துறையில் வேளாளர் நாகரிகம், பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் ஆகிய நூல்கள் வேறுபட்ட ஆரிய திராவிட இனங்களின் பண்புகளையும் சாதிகள், சமயச்சடங்குகள் தோன்றிய முறையையும் இனிது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/301&oldid=1581234" இலிருந்து மீள்விக்கப்பட்டது