உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

❖ LDMMLDMOLD-12 →

வுருவும், அத்திருவுருவிற்கு ஒரு நிறமும், அதனை அழைத்து வாழ்த்துதற்கும் வணங்குதற்கும் ஒரு பெயருங் குறிப்பிட்டா லன்றி, அதனை மனத்தால் நினைந்து வாயால் வாழ்த்திக் கையாற் றொழுதல் ஒரு சிறிதும் இயலாது. பழைய செந்தமிழ் இலக்கியங்களை அருளிச் செய்த புலவர்களுந் தாந்தாஞ் செய்த கடவுள் வாழ்த்தைச் சிவபெருமான் முருகவேள் மேற்றாகவாதல் திருமால் கண்ணன், அருகன், புத்தன் மேற்றாகவாதல் வைத்துப் பாடியிருக்கின்றனரே யல்லாமல் உருவும் பெய ருமில்லாக் கடவுண்மேல் வைத்துப் பாடிற்றிலர். ஆதலாற் கம்பர் பாடிய வாழ்த்துச் செய்யுள் குற்றமுடைத்து.

கூத்தரும் மற்றைப் புலவரும் : ஆம்! ஆம்! இக்குற்றந் தீர விடையளிக்க வேண்டுவது கம்பர் கடமையே.

கம்பர் : பல்சமயப் புலவருங் குழுமிய இம்மாப் பேரவை யில் அவ்வெல்லார்க்கும் பொதுப்பட வைத்து முழுமுதற் கடவுள் வணக்கஞ் சொன்னேனாகையால், அது குற்றமாதல் செல்லாது.

வைணவப் புலவர் : அது பொதுக் கடவுள் வணக்கம்

என்பது சாலாது. என்னை? "சிற்குணத்தர்" என்னும் இரண்டாவது செய்யுளிலும், “ஆதியந்தம் அரியென” என்னும் மூன்றாவது செய்யுளிலும், திருமாலையே முதற் கடவுளாக வைத்துக் கம்பர் பாடியிருத்தலால், முதற் செய்யுளைப் பொதுக் கடவுள் வணக்கமென்று அவர் கூறுவது பொருந்தாமையின் மேலும், இப்பொதுப் பேரவையை நோக்கிப் பொதுக் கடவுள் வணக்கஞ் சொல்ல வந்தவர், பின்னிரண்டு செய்யுட்களிலுந் திருமாலுக்கு முதன்மை சொல்வது முன்னோடு பின் முரணாகுமன்றோ?

கோமாளி : (அரசனை நோக்கி) மாராசா! பொல வருக்கா அச்சப்பட்டுச் சொன்னாரே அதெப் பொலவர் வணக்கம் என்னாமே, கடவுள் வணக்கம் என்னு ஏன் சொல்ல ணும்? என்னு நான் ஒருகேள்வி கேக்கிறேன். (எல்லோரும் சிரிக்கின்றனர்)

அம்பிகாபதி : (உடனே எழுந்து) 'புலவர்' என்னுஞ் சொல்லுக்குக் 'கடவுளர்' என்றும் ஒரு பொருள் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/65&oldid=1580667" இலிருந்து மீள்விக்கப்பட்டது