உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

31

தமது கருத்தைத் தெரிவிக்குமாறு நம் வேந்தர் பெருமான் விரும்புகின்றார்கள்.

66

கூத்தர் : அரசர் ஏறே! அமைச்சர் பெருந்தகையே! அருந் தமிழ்வல்ல பெருந் தமிழ்ப் புலவர்களே! கல்வியிற் சிறந்த கம்பர் இயற்றியிருக்கும் இராமவதாரம் என்னும் பெருங் காப்பியத்தை நாம் எல்லாங் கேட்டு மகிழவேண்டுவதே செயற் பாலது. இங்கமர்ந்திருக்குங் கலைவாணரின் கருத்து யாதோ?

ஒரு புலவர் : (எழுந்து) ஆம்! அந் நூற் சொற்பொருள் களில் எமக்குக் குற்றமாகத் தோன்றுவனவற்றை நாங்கள் வினவவும், அவைகட்குக் கம்பர் விடை சொல்லவும் நம் அரசர் பருமான் கேற்றுவிக்கலாம்.

இசைந்தால், அதனை இங்கே அரங்

(மற்றைப் புலவர்களுந் தமது இணக்கத்தை ஆம், ஆம் என்று கைகொட்டி ஆர்ப்பரிக்க அரசன் கம்பரை நோக்குதலும்)

கம்பர் : நம் மன்னர்பிரான் கட்டளைப்படியே யானும் என் புதல்வன் அம்பிகாபதியுங் களிப்புடன் விடையளிக்கக்

காத்திருக்கின்றோம்.

கூத்தர்: அங்ஙனமாயின், தமது “இராமாவதாரத்தைக்' கம்பர் துவக்கஞ் செய்து படித்துப் பொருள் விளக்கட்டுமே.

அரசனும் அமைச்சரும் : அங்ஙனமே செய்க! (எனச் சொல்லிப் பணியுடன் கம்பர்க்குக் கைக்குறிகாட்டக் கம்பர் தமது நூலின் முதற் கண்ணதான “சிறப்புப் பாயிரத்தைப்” படித்துப் பொருள் விளக்கினர்)

சைவ சமயப் புலவர் ஒருவர் : (எழுந்து) முதற்கட்படித்த “உலகம் யாவையுந் தாமுள வாக்கலும்” என்னுங் கடவுள் வாழ்த்துச் செய்யுள், படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழிலைச் செய்யும் முழுமுதற் கடவுண்மேற்பாடப் பட்டிருப்பினும், அம்முதற் கடவுள் சிவபெருமானா? அல்லது திருமாலா? என்னும் வினாவுக்கு அதில் விடை இல்லை. முத்தொழிலைச் செய்யும் முழுமுதற் கடவுளுக்கு ஒரு திரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/64&oldid=1580666" இலிருந்து மீள்விக்கப்பட்டது