உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

மறைமலையம் 12

பகைமை நீண்டகாலமாய் வேரூன்றியிருக்கின்றது; அதனால், அவரது சொற்கேட்டே நடுவின்றித் தாங்கள் இராமாயணத்தை அரங்கேற்ற மறுத்தீர்களென்னும் பழிச்சொல்லும் உண்டாம்.

அரசன் : (பதைத்து) அற்றேல், அவர் அந்நூலை அரங் கேற்றுவதற்கே ஒழுங்குசெய்து விட்டீர்கள் போலும்!

அமைச்சர் : இல்லை அரசே, இன்றுடன் அரங்கேற்றம் முடிந்துபோகும். நம் புலவர்கள் இடுஞ் சொற்போரால் உடனே அது முடிவுக்கு வருதலைக் காண்பீர்கள்!

கோமாளி: மாராசா, புலவர் சண்டையை நிறுத்தாதிங்க. ஊருச்சண்டே கண்ணுக்குக் குளிர்ச்சி.

அரசன் : (நகைத்து) ஏடா துத்தி, புலவர் சண்டை கண்ணுக்கு மட்டும் அன்று அஃது அறிவுக்குங் குளிர்ச்சி தான்.

(ஒட்டக்கூத்தர், கம்பர், அம்பிகாபதியும் மற்றைப் புலவரும் பிறரும் வருகின்றனர்)

அரசன் : (இருக்கையினின்றும் எழுந்து) புலவர் பெருமான் கட்கு வணக்கம். எல்லீரும் இருக்கையில் அமர்ந்தருள்க! (எல்லாரும் அமர்கின்றனர்)

அமைச்சர் : (உடனே எழுந்து நின்று) வேந்தர் பெருமா னுக்கும், இப்பேரவையில் அமர்ந்திருக்கும் நல்லிசைப் புலவர்க்கும், பிறர்க்கும் எனது வணக்கம். அறிவான் ஆன்ற சான்றோர்களே! நம் மன்னர் பெருமான் நிறுவியிருக்கும் இ புலவர் பேரவையிற் பெருந் தமிழ்ப் புலவரும் பாவலருமாக நுங்களாலும் மற்றவர்களாலும் மிகப் பாராட்டப்படுங் கம்பநாடர் "இராமாயணம்” என்னும் பெருங்காப்பியத்தைத் தமிழில் மொழி பெயர்த்துப்பாடி இருப்பது நீங்கள் அனைவரும் அறிந்ததொன்றேயாம். அதனை அவர் இங்கே அரங்கேற்றக் கொணர்ந்திருக்கின்றனர். முதுமையிலும் முது தமிழ்ப் புலமையிலும் இப்புலவர் பேரவைக்குத் தலைமை யாசிரியராய் அமர்ந்திருக்குங் கூத்தமுதலியார் இதைப்பற்றித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/63&oldid=1580665" இலிருந்து மீள்விக்கப்பட்டது