உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

29

களிலுமிருந்து

குயில்கள்

கூவு கின்றன,

நாகணவாய்

பாடுகின்றன; இ வை யெல்லாம் நம் உணர்வினை இயற்கை யழகின் வயப்படுத்தி நமதுள்ளத்தினை எத்துணைப் பெருங் களிப்பின்கண் தோய்த்து விடுகின்றன!

அரசன்: ஆம் நம்பிப் பிள்ளை, என் முன்னோரான சோழ வேந்தர்கள் தமிழமிழ்தை ஆரப்பருகித் தெவிட்டா அவ்வின்பத்தில் வாழ்நாள் முழுதுந் திளைத்தவர்கள். ஆதலால் அகத்தே தாம் துய்த்த அப்பேரின்பப் பெருக்கைப் புறத்தே இவ்வமைப்பிலும் பெருகவிட்டுக் களிகூர்தற்கே இப்புலவர் மண்டபத்தையும் இதனைச் சூழ்ந்த இளமரக் காவையும் வழி வழியே இவ்வளவு அழகுடையவாகச் சீர் செய்து வந்தார்கள். ஆ! இந்நேரத்திற் றாங்கள் நமது புலவர் பேரவையினைக் கூட் ஒழுங்கு செய்தது எவ்வளவு நல்லதாயிருக்கின்றது!

அமைச்சர் : இப்போது நடைபெறப்போகுங் கம்ப ராமாயண அரங்கேற்றத்தால் நம் புலவர் குழுவிற் பெரும் போராட்டம் நேரும். ஆதலால் அது தணிதற்கு இரவில் நெடுநேரஞ் செல்லுமெனக் கண்டே, எப்போதும் போல் மாலைப்பொழுதில் இவ்வவையினைக் கூட்டாமல் முன்ன தாக இப் பிற்பகலிலேயே இதனைக் கூட்ட ஒழுங்கு செய்தேன் பெரும!

அரசன் : அது நன்றே. ஆனாலும், ஆசிரியர் கம்பர் தமது இராமாயணத்தை நமது புலவர் பேரவையில் அரங்கேற்றக் காணராமற் செய்துவிடவேண்டுமென்றன்றோ புலவர் பெருமான் கூத்த முதலியார்க்கு யான் சொல்லி விட்டேன்.

அமைச்சர் : அதைப்பற்றி முதலியாரும் யானும் நெடுநேரம் பேசினோம். கம்பர் கல்வியிற் பெரிய புலவர் பெருமானாய் இருத்தலுடன், முன்னே தங்கட்கும் பின்னே தங்கள் இளவரசியாருக்கும் ஆசானாகவும் இருக்கின்றார். பேர் உழைப்பிற் பாடிய அப்பெருங் காப்பியத்தை அவர் நமது புலவர் கழகத்திற்கொணர்ந்து அரங்கேற்ற இடங் கொடுத்திலாமாயின் அவர்க்கு நம்மாட்டு மிக்க மன வருத்தம் உண்டாகும். அதுவேயுமன்றிக் கூத்தர்க்கும் அவர்க்கும் புறத்தொன்றாப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/62&oldid=1580664" இலிருந்து மீள்விக்கப்பட்டது