உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

இரண்டாம் நிகழ்ச்சி : முதற் காட்சி

களம் : சோழன் அரண்மனையிற் புலவர் மண்டபம்: நேரம் : பிற்பகல்

சோழன் : (அமைச்சர் நம்பிப் பிள்ளையை நோக்கி) ஐய! இப் பங்குனித் திங்களிலேயே வெயிலின் கடுமை மிகுதியா ருக்கின்றது! பகல் இருபத்தைந்து நாழிகை ஆனமையால் ப்போதுதான் வெயிலின் கடுமை தணிந்து வருகின்றது. புழுக்கத்தை மாற்றித் தென்றல்காற்று மெல்லென வீசு கின்றது. சண்பகம் சந்தனம் முல்லை மௌவல் முதலான மலர்களின் நறுமணத்தில் அளைந்து வருதலால் மாலைக்காற்று நம் உடம்புக்கும் உயிருக்கும் எவ்வளவு ஆறுதலையுங் கிளர்ச்சியையுந் தருகின்றது! பாருங்கள்!

இம்

அமைச்சர் : ஆம், பெருமானே! கொழுந்தமிழ் நற வினைப் பருகும் புலவர் பெருமக்கள் குழாம் ஒருங்கு கூடியிருந்து அகப்பொருள் புறப்பொருள்களை நுணு கி ஆராய்ந் தின்புறுதற்கு ஏற்றதோரிடமாக இம்மண்டபம் அமைக்கப் பட்டிருப்பதுதான் பெரிதும் பாராட்டற்பாலது! இதனைச் சூழ்ந்துள்ள இளமரக்காவில் மணங் கமழ் மரஞ் செடி ச் கொடிகள் அழகுற அமைந்து பசுந்தழை நெருங்கிப் பல நிறப்பூக்கள் உடையவாய்ப் பகலவன் வெப்பந் தோன்றாவாறு தண்ணிழல் பயந்து நிற்கின்றன. இம் மரத் தொகுதிகளின் இடையிடையே பளிங்கை உருக்கி நிறைத்துவிட்டாற்போற் குளிர்ந்த நீர் நிரம்பிய வாவிகள் அமைந்து விளங்குகின்றன; அவ்வாவிகளில் அகன்ற இலைகளின் ஊடே ஊடே அல்லியுந் தாமரையும் முறுக்கவிழ்ந்த மலரினவாய்த் திகழ அம்மலர் களிலும் இலைகளிலும் பெரியவுஞ் சிறியவுமான புள்ளினங்கள் பறந்து பறந்தமர்கின்றன. மரக்கோடுகளிலும் பூங்கொடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/61&oldid=1580663" இலிருந்து மீள்விக்கப்பட்டது