உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

27

கோமாளி : ஆமா, மாராசா, நான் சோறு தின்னுகிட்டே ரொம்பநாள் இருப்பேன். சோறு தின்னாமே நீங்க ஒரு நாளாவது இருக்க முடியுமா?

அரசன் : உணவருந்திப் பலநாளிருப்பதில் வியப் பொன்றும் இல்லை. உணவு அருந்தாமற் சிலநாளாயினும் இருப்பதுதான் வியப்பு.

கோமாளி : நம்மால் அது முடியாது. நமக்கு மூணு வேளையும் சட்டதிட்டமாகச் சாப்பிடணும். என் னுடம்பைப் பார்த்திங்களா? (தன் தடித்த உடம்பைத் திருப்பித் திருப்பிக் காட்ட மூவரும் சிரிக்கின்றனர்) நீங்க வேள வளைக்குச் சாப்பிடாமே எஃகு குச்சிபோல் இளைச்சு இருக்கிறிங்கோ வாங்க போவலாம், பேச்சே வளத்தாதிங்க. (அரசன் அவனுடன் செல்ல, அரசியரும் அரசனை வணங்கித் தம் உணவறைக்குச் சென்றுவிட்டனர்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/60&oldid=1580662" இலிருந்து மீள்விக்கப்பட்டது