உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

❖ LDM MLDMOLD-12 →

அருமைப் புதல்வி அமராவதியுங்

காத லன்பைக் கடைக்கண் நிறுவிநம்

மேதகு நிலையை அறிவான் அளந்தொரு

மன்னவன்மகனை மணந்து

நன்னய வாழ்க்கை நடத்தவே கடவள்.

அமராவதி :

பொல்லாத இவ்வுலகிற் பொருந்தாத வாழ்க்கையினில் ஒல்லா மனத்தோ டொருங்கிருந்து நைவதினுங் கல்லாத நூலெல்லாங் கற்றறிந்து கண்ணுதலின் சொல்லார் திருவடிகள் தொழுதிருப்பேன் தோன்றலே!

அரசன் : அம்மா, அமராவதி! எவ்வளவுதான் கல்வி யிலுங் கடவுள் வழிபாட்டிலுங் கருத்தைச் செலுத்தி யிருந்தாலும், நீ திருமணமின்றியிருத்தல் நங்குலத்திற்கு அடாது. இப்போது நீ பதினாறாண்டுக்கு மேற்பட்ட மடந்தைப் பருவத்தை அடைந்துவிட்டாய். (தன் மனைவியை நோக்கி) நம் பாண்டி மன்னன் மகனும் நின் தம்பியுமான குலசேகர பாண்டியனை வருவித்துச் சிறிதுகாலம் நம் புதல்வியுடன் அவன் பழகுமாறு செய்வோம்.

அரசி : பெருமான் திருவுளப்படியே.

(கோமாளி வருகிறான்)

அரசன் : ஏடா, துத்தி! உணவெடுத்தற்கு அழைக்க வந்தனையோ?

கோமாளி : ஆமா, மாராசா! பத்து நாழி ஆனதுகூட உங்களுக்குத் தெரியலே. உங்களுக்குப் பேச்சு ஆப்பிட்டா சோறுகூட வேணாம். (அரசியை நோக்கி) சின்னம்மா, பெரியம்மா, இந்தராசா கூட ரொம்பப் பேச்சு வச்சுக்காதிங்க. உங்களெக்கூட சோறுதின்ன விடமாட்டார்.

அரசன் : என்னடா, துத்தி! எந்நேரமுஞ் சோற்றையே கட்டிக்கொண்டு அழுகின்றனையே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/59&oldid=1580661" இலிருந்து மீள்விக்கப்பட்டது