உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

புதுமை சிதைக்கும் புயற்கால் முன்னோ? தோகை மாமயில் ஓகையில் ஆல்வது கருமுகில் முன்னோ? கதிரவன் வெம்மையிற்

பால்நுரை யென்னப் பார்க்கும்

வால் நிற மாசியின் முன்னோ? மன்னா!

அரசன் :

நன்கு நுவன்றனை நங்காய்! நீபுகல் அல்லியும் மாவும் மெல்லிய குயிலும்

நீல மஞ்ஞையும் மாந்தரைப் போலப் பகுத்தறி வுடைய பிறவியோ வகுத்தி! அதனால், தேரும் அறிவின் வழிவைத் தன்பை ஆரச் செலுத்தல் அணங்களை யார்க்கு மான வாழ்க்கையென மதித்தறி நீயே

அரசி :

அன்பின் வழிய துயர்நிலை யென்ற வள்ளுவர் வாய்மொழி பொய்யோ வள்ளால்! உயிர்க்குயிராக நடக்கும் அன்பின்

வழியே அறிவும் ஒழுகுவ தல்லது

மாறி இயல்வதை மகாரிலுங் கண்டிலம், பிள்ளைப் பருவத்துப் பள்ளியிற் கொள்ளுஞ்

சிறார்தங் கேண்மை சிறந்ததோ? வெறாத நெஞ்சின ராகி எஞ்சா தியாவுந்

தேர்ந்து பார்த்து நேர்ந்த கேண்மை மைந்தரில் மகளிரிற் சிறந்ததோ? பகரீர்

அரசன் :

அன்பும் அறனும் அறிவினை முன்நிறீ இப் பின்பு செல்லா வாயின் மண்ணோர் அல்லற் கடலிற் பட்டுப் பல்லோர்

பழிக்க மாய்வது திண்ணம்; அதனால்

25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/58&oldid=1580660" இலிருந்து மீள்விக்கப்பட்டது