உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

மறைமலையம் 12

அன்னையின் உண்மை மொழிகளையுங் கண்ணகி மாதவியின் அன்பின் திறத்தையும் நினைத்துப் பார்க்குங்கால், நம்மை யறியாமலே நமதுள்ளத்தில் நிகழும் அத்தகையதோர் அன்பு இருக்கத்தான் வேண்டு மென்றுணர்கின்றேன்.(என்று சொல்லி அமராவதியை உற்று நோக்கியிருக்க)

அரசி : பெரும, என்ன என் மகளை உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றீர்களே?

அரசன் : அங்கயற்கண்ணி! நின் அழகை யெல்லாம் வடித்தெடுத்துத் திருத்திய பொற்பாவைபோல் அமராவதி திகழ்கின்றாள். இவட்கு ஏற்ற கணவன் வாய்க்க வேண்டுமே! இவட்கு அவன்பாற் காதலன்பு நிகழ வேண்டுமே! என் பதைப் பற்றித்தான் கவலைப்படுகின்றேன்.

அரசி : அதைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். அமராவதியின் மனப்பாங் கறிந்தே மணம் முடிப்போம்.

அரசன் : அஃது எங்ஙனம் முடியும்? நாமோ மிக உயர்ந்த அரச வாழ்க்கையில் இருக்கிறோம். நம்மையொத்த சேர பாண்டிய அரச குலத்திற் பிறந்த அரசிளைஞரிலிருந்தன்றோ நாம் நம் புதல்விக்கு மணமகனைத் தேர்ந்தெடுத்து மணம் புரிதல் வேண்டும்? தேர்ந்தெடுக்கப்படுபவன்பால் இவட்குக் காதலன்பு நிகழாவிட்டாலும், நமது மேல் நிலையையறிந்து இவள் அவன் பாற் பேரன்பு பாராட்டக் கடமைப்பட்டிருக் கின்றனளன்றோ?

அரசி : பெரும! என் புன்சொல்லையும் நன்சொல்லா நீங்கள் செவியேற்றருளல் வேண்டும். கணவன் மனைவியர்க்குள் உண்ட ாகும் அன்பு பிறர் குழைத்து ஊட்டுவது அன்று, அஃதவர்க்குள் இயற்கையாகவே உண்டாவது:

தேம்பொதி ஆம்பல் திகழ்மதி மன்னோ

வேங்கதிர் முன்னோ விரிந்துவாய் விளங்கும்? கொழுஞ்சுவை மாவும் மாவுறை குயிலுங் குழைமுகந் தோன்றிக் கூவிக் களிப்பது பொதியத் தென்றலின் முன்னோ? அன்றிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/57&oldid=1580659" இலிருந்து மீள்விக்கப்பட்டது