உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

அமராவதி : : (புன்சிரிப்புடன்)அப்பா,

23

அம்மாவும்

நீங்களுந்தாங் காதலன்பு மிக்கவர்கள் ஆயிற்றே. உங்கள் உள்ளம் அறிந்ததொன்றை வினவினால் அம்மா எங்ஙனம் விடை சொல்லுவார்?

அரசி : அம்மா! உண்மையைச் சொல்லிவிடுகின்றேன். (அரசன் திடுக்கிடுகின்றான்) யான் உன் தந்தையாரைப் பாராமலும் வரது உள்ளன்பை யான் அறியாமலும் இருக்கையில், என் பெற்றோர்கள் இவர் தம் பெற்றோருக்கு ணங்கி என்னை இவர்க்கே மணஞ் செய்து கொடுக்க உறுதி செய்துவிட்டார்கள். ஆனால் அப்போது என் உள்ளத்தில் உண்டான நடுக்கத்தைச் சிவபிரான் ஒருவரே அறிவர். எனது காதலன்புக்கு ஏற்றவர் அல்லாது ஒருவரை யான் மணக்கும்படி நேர்ந்ததால் யான் என் செய்வதென்று மிகவும் கலங்கி நின்றேன். மணம் முடிந்த பிறகோ யான் செய்த நல்வினைப் பயத்தால் இவர்பால் எனக்குக் காதலன்பே நிகழ்ந்து எனது நடுக்கத்தைத் தீர்த்தது. நின் தந்தையாரும் இதுவரையிற் பேரன்புடைய ராகவே என்பால் நடந்து வருகின்றார். அஃது யான் பெற்ற பெறுதற்கரிய பேறன்றோ?

உண்

அரசன் : செல்வி, அமராவதி! நின் அன்னை மையைச் சொல்லிவிடுகின்றேன்' என்றதைக் கேட்டவுடன் என் நெஞ்சந் திடுக்கிட்டது. எங்கே இவள் காதலன்பில்லா மனையாளாயினளோ என அஞ்சினேன். ஆனாற் பேரன்பினள் என்பதை நெடுக அறிந்தே வருகின்றேன். நின் அன்னையின் பேரழகையுங் குணநலங் கலைநலங்களையும் யான் கண்டது முதல் என் உயிர் ஒரு புதிய இன்ப உணர்ச்சி வாய்ந்ததாய் இவளை என் உயிராகவே கருதி வருகின்றது.

அமராவதி : (கை கொட்டிச் சிரித்துக் கொண்டு) அம்மா, ) அம்மா, இப்போதுதான் அப்பாவுக்குக் காதலன்பு இன்னது தான் என்று தெரிந்துவிட்டது.

அரசன் : அங்ஙனமன்று கண்மணி, யான் பழைய தமிழ் இலக்கியங்களைப் பயின்ற காலத்திலேயே காதலன்பைப் பற்றி அறிவேன். ஆனால், அது புலவர்களாற் புனைந்து கட்டப் பட்டுச் சொல்லளவாய்க் கருதப்படுவதேயன்றி மெய்யாகவே நிகழ்வ தன்றென்றே எண்ணி வந்தேன். இப்போது நின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/56&oldid=1580658" இலிருந்து மீள்விக்கப்பட்டது