உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

❖ LDM MLDM-12 →

அமராவதி : அப்பா, அரசியல் நிகழ்ச்சிகளிற் கருத்து ஈடுபட்டு இருத்தலால் வைகளை மறந்துவிட்டது இயற்கை தானே அம்மா!

அரசி : அஃதியற்கைதான் கண்மணி! நாம் எந்நேரமும் மிகுதியாய்க் கல்வியிலேயே நினைவு வைத்திருப்பதால் இவை நம் நினைவை விட்டகலவில்லை. மேலும், நான் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களைப் பயின்ற பின் கண்ணகி, மாதவி, மணிமேகலை என்னும் பெண்மணிகளின் பேரன்புங் கற்பும் என் நினைவிற் கண்மேலெழுத்துப் போற் பதிந்து, தூண்ட ா மணிவிளக்குப் திகழ்ந்து

கொண்டிருக்கின்றன.

போற்சுடர்ந்து

அரசன் : என்ன அங்கயற்கண்ணி! அம்மாதர்களின் அவ்வளவு மிகுதியாகச் மணஞ்செய்து

அன்பை

சிறப்பித்துப் கொண்டபின்

பேசுகின்றனையே! தங்கணவரிடத்தில் அன்பில்லா தொழுகும் மாதரார்தாம் யார்

உளர்?

அரசி : பெரும! உறவினராற் பிணைக்கப்பட்ட மண மக்களிடத்துக் காதல் அன்பும் உண்மைக் கற்பொழுக்கமுந் தோன்றி நிலைத்தல் அரிதாகவே யிருக்கின்றது, இத்தகைய சேர்க்கையிற் பலர் தம் உறவினரின் கட்டுப்பாட்டுக்காகவே ஒருவர் மீதொருவர் அன்பு பாராட்டுகின்றனர்; மற்றும் பலர் கடமைக்காகவே வாழ்க்கை செலுத்துகின்றனர்; இன்னும் பலர் பிறர் கூறும் பழிக்கஞ்சி ஒருமித்திருக்கின்றனர் மேலும் பலர், முன்னமே தம்மால் விரும்பப்பட்டார் பால் உள்ளன்பும், தமக்குள் வெளியன்பும் உடையவராய்க் கரந்தொழுகு கின்றனர்; இங்ஙன மெல்லாமின்றி, மணந்து கொண்டபின் ஒருவரையொருவர் உயிராய்க் கருதியொழுகுங் கணவன் மனைவியரும் இல்லாமற் போகவில்லை.

அரசன் : அங்ஙனமாயின், அங்கயற்கண்ணி! நீ என்மேல் எவ்வகையான அன்பு பூண்டு நடக்கின்றனையோ?

(அரசி நாணத்தால் வாளாதிருக்க)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/55&oldid=1580657" இலிருந்து மீள்விக்கப்பட்டது