உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

21

66

அரசன் : அஃதியாது?

அரசி :

காகத் திருகண்ணிற்கொன்றே மணிகலந் தாங்கிருவர் ஆகத்துள் ஒருயிர் கண்டனம் யாம்இன்றி யாவையுமாம் மேகத் தொருவன் இரும்பொழில் அம்பலவன் மலையில் தோகைக்குந் தோன்றற்கும் ஒன்றாய் வரும்இன்ப துன்பங்களே”

இவ்வருமைத் திருப்பாட்டிற்கு இலக்கியங் கண்ணகி யும் மாதவியுமாதல் அவர்தம் நிகழ்ச்சிகளை நேரே கண்டுங் கேட்டும் இளங்கோவடிகள் இயற்றியருளிய சிலப்பதிகாரத் தால் நன்கறிகின்றனம் அரசே!

அரசன் : கண்ணகியும் மாதவியுங் கோவலனைத் தம் முயிராகக் கருதி அன்பு பாராட்டினராயின் அவன் இறந் கேட்டவுடனே அவ்விருவரும் ஏன் இறந்துபட

தமை வில்லை?

அரசி : பின் நிகழ்ச்சிகளைப் பெருமான் மறந்து விட்டீர்கள் போலும்! கோவலனைக் கள்வனெனப் பிழைத்துணர்ந்து பாண்டியன் அவனைக் கொலை செய்வித்தமையின், தன் கணவற்கு அக்குற்றம் அணுகாமைப் பொருட்டும் பாண்டியன் முறை தவறிச் செய்த குற்றத்தை அவற்கு எடுத்துக்காட்டி அவனைப் பழிக்குப்பழி வாங்குதற் பொருட்டுங் கொலைக் களத்திற்பட்ட தன் கணவனைக் காணுதற் பொருட்டுமே கண்ணகி சிலநாள் உயிர் தாங்கியிருந்து, தன் நோக்கம் முடிந்தபின் தன்னுயிர் நீத்துத் தன் கணவனை நுண்ணுடம்பிற் கண்டு அவனுடன் கூடி வானுலகு புகுந்தனள். மாதவியோ தான் ஈன்ற அருமை மகள் மணிமேகலையின் பொருட்டுச் சிறிது காலம் உயிர் தாங்கிப் பின்னர் துறவியாகி உயிர் நீங்கினள். ஆசிரியர் இளங்கோ வடிகள் இந்நிகழ்ச்சிகளைத் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கின்றனரே!

அரசன் : இவைகளை முற்றுமே மறந்து போனேன்

கண்மணி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/54&oldid=1580656" இலிருந்து மீள்விக்கப்பட்டது