உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

❖ LDMMLDMELD -12 →

(அமராவதி மறுபடியும் யாழை இயக்கிப் பாடுகின்றாள்)

"இன்புறு தங்கணவர் இடரெரி யகம் மூழ்கத் துன்புறு வனநோற்றுத் துயருறு மகளிரைப்போல் மன்பதை யலர்தூற்ற மன்னவன் தவறிழைப்ப

அன்பனை இழந்தேன்யான் அவலங்கொண்டழிவனோ"

அரசன் : (நெஞ்சழிந்து) அம்மா! துயர் மிகுந்த பாட்டுப் போதும், நிறுத்திவிடு.

ப்

அரசி : ஆற்றாமையிலும் ஓர் இன்பம் இருக்கின்றது. பெரும! முதன்மையாய்க் காதலன்பிற் பிணிப்புண்டவர்பட்ட துன்பங்களைக் கண்டுங் கேட்டும் நாம் அழும் போதும் ஓர் இன்பத்தை அடைகின்றோம்; அல்லாக்கால் அந்நிகழ்ச்சிகளைக் காண்பதிலுங் கேட்பதிலும் நமக்கு விருப்பம் உண்டாகாதன்றோ? (அரசனை நோக்கி) பெருமான் கருத்து யாதோ?

அரசன் : அது மெய்யே, என்றாலுங், கணவனும் மனைவியுமாய் வாழ்பவர் தம்முள் அன்புடையராயினும் இலராயினும் ஒருவரையொருவர் இழக்க நேருங்கால் துய ருற்றுப் புலம்புவது இயற்கைதானே! அதைக் காணும் பிறரும் அந்நேரத்தில் ஆற்றாராய்க் கண்கலுழ்தலும் இயற்கைதானே! அங்கயற்கண்ணி! அதைச் சிறப்பித்துப் பேசுவதில் என்ன ஏற்றம் இருக்கிறது?

அரசி : அங்ஙனமன்று பெருமானே! காதலன்புடையார் தம் பிரிவில் உண்டாகும் ஆற்றாமை அவருயிர் உடம்பில் தாங்கமாட்டாத ஓர் ஏக்கத்தினை உண்டாக்கி விடுகின்றது. அதனால் அவருள் ஒருவர் மாய்ந்தக்கால் மற்றவரும் ஏங்கி உயிர் துறந்துவிடுகின்றனர். வேறு வலிய காரணத்தால் உயிர் பிழைத்திருப்பினும் நடைப்பிணமாகவோ, இவ்வுலகியலிற் பற்றற்று இறைவன்பால் உருகி ஓடுங்கியபடியாகவோ வாணாட் கழிக்கின்றனர். காதலரைப்பற்றி மாணிக்கவாசகப் ருமான் திருவாய் மலர்ந்தருளியது இப்போதென் நினைவுக்கு வருகின்றது.

ய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/53&oldid=1580655" இலிருந்து மீள்விக்கப்பட்டது