உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

"நண்பகற் போதே நடுங்குநோய் கைம்மிகும் அன்பனைக் காணா தலவுமென் நெஞ்சன்றே அன்பனைக் காணா தலவுமென் நெஞ்சாயின் மன்பதை சொன்னதவன்வாழி யோதோழீஇ" “தஞ்சமோ தோழீ தலைவன் வரக்காணேன் வஞ்சமோ உண்டு மயங்குமென் நெஞ்சன்றே வஞ்சமோ உண்டு மங்குமென் நெஞ்சாயின்

எஞ்சலார் சொன்ன தெவன் வாழி யோதோழீஇ”

(அமராவதி கண்ணீர் சிந்தியபடியாய்ப் பாட

அரசியுங் கண்கலுழ்கின்றாள்)

19

அரசன் : (இருவரையும் நோக்கி) ஆ! கண்ணகி ஆற்றாது பாடிய இவ்விரங்கற் பாக்கள் நுங்களிருவரையும் அழச் செய்துவிட்டன!

அரசி : ஆம், பெரும! அமராவதி பாடியது கண்ணகியே நேரிருந்து ஆற்றாது பாடியதைப் போலிருந்தது. கணவன் கொலையுண்ட செய்தி தெரியாதிருக்கையிலேயே அவர்க்கு ஏதோ தீங்கு நேர்ந்ததென்று நெஞ்சம் ஐயுற்று இங்ஙனம் அழுதனளாயின் அவன் இறந்த செய்தி கேட்ட பின் அவள் எவ்வளவு துடிதுடித்திருப்பாளோ! ஐயோ! கண்ணகி கணவன் மேல் வைத்த மேல் வைத்த காதலன்பு அளவிடற் பாலதா யில்லையே!

அரசன் : இவ்வரிப் பாட்டுகளை இயற்றிய இளங்கோ வடிகள் இவை தம்மை எத்துணைத் திறமையாகப் பாடி யிருக்கின்றார்.

அரசி : ஆம், பெரும! கண்ணகியின் காதலுயிர் துடி துடித்த நிலையில் இளங்கோவடிகள் தாமுமிருந்து பாடின மையாலன்றோ அவை அவ்வளவு உருக்கம் வாய்ந்தனவா யிருக்கின்றன! அம்மா, அமராவதி, கணவன் இறந்த செய்தி கேட்டபின் கண்ணகி துயருற்ற துயரப் பாடல்களையும் பாடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/52&oldid=1580654" இலிருந்து மீள்விக்கப்பட்டது