உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

உங்கள்பாற் லாகுமோ?

❖ LDM MLDM-12 →

குறைந்த

அன்புடையேனென்று

கூற

அரசன் : (மகளின் நெற்றிமேல் முத்தமிட்டு) அருமைச் செல்வி, நின் அறிவு மொழியை மெச்சினேன். நாங்கள் வரும்போது யாழொலி கேட்டது: நீ யாழ்ப்பயிற்சி செய்து காண்டிருந்தனை போலும்!

அமராவதி : ஆம், அப்பா, யான் ஆசிரியர் கம்பர்பாற் சிலப்பதிகாரம் பாடங் கேட்டு வருவதுதான் உங்கட்குத் தெரியுமே. அக்காப்பியத்தின் இடையிடையே அமைக்கப் பட்டிருக்கும் இனிய வரிப்பாட்டுகளை யாழிலிட்டுப் பாடி இசைப்பயிற்சி செய்து கொண்டிருந்தேன்.

அரசன் : கண்மணி, நீ இயற்றமிழோடு இசைத்தமிழ் நாடகத் தமிழ்களுங் கருத்தாய்ப் பயின்று வருவதுதான் என்னுள்ளத்திற்குப் பெருங் களிப்பினைத் தருகின்றது.

அரசி : கல்வி விளக்கே, உன் தந்தையார்க்கு மட்டுமன்று, எனக்கும் நின் முத்தமிழ்ப் பயிற்சி எவ்வளவோ பேரு வகையினைப் பயக்கின்றது! பார்! நின் தந்தையின் முன்னோ ரான கரிகாற் சோழ வேந்தரின் மகள் ஆதிமந்தி என்னுங் கற்பரசி முத்தமிழ்ப் புலமை முழுதும் வாய்ந்து திகழ்ந்தமை அகநானூற்றில் காணப்படும் அவருடைய பாக்களால் நன்கறிகின்றனம் அல்லமோ? அங்ஙனமே நம் சேர சோழ பாண்டிய மரபில் வந்த பெண்மணிகளெல்லாரும் முத்தமிழ்ப் புலமையில் மிகச்சிறந்தே விளங்கினர்.

அரசன் : நல்லது, சிலப்பதிகாரத்தில் இப்போது நீ பயிலும் பகுதியிலிருந்து சில வரிப்பாடல்களை எடுத்து யாழில் இசைத்துப் பாடு.

அமராவதி : அங்ஙனமே செய்கின்றேன். அப்பா (யாழைக் கையிலெடுத்து வணங்கி அதனை இயக்கிப் பாடுகின்றாள்)

66

'காதலற் காண்கிலேன் கலங்கிநோய் கைம்மிகும்

ஊதுலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சன்றே ஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சாயின் ஏதிலார் சொன்ன தெவன்வாழி யோதோழீஇ”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/51&oldid=1580652" இலிருந்து மீள்விக்கப்பட்டது