உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

முதல் நிகழ்ச்சி : இரண்டாங் காட்சி

களம் : அரண்மனையிற் கன்னி மாடம்.

நேரம் : அதுவே.

அரசனும் அரசியும்:

(வாயில் காப்போளை நோக்கி)

ஏடி தத்தே! நாங்கள் வருவதை முன்னோடிச் சென்று அமராவதிக்குத் தெரிவி. (அவள் இருவரையும் வணங்கி விரைகின்றாள்)

அரசனும் அரசியுங் கன்னி மாடத்தினுட் செல்ல அமராவதி எதிரே வந்து)

அமராவதி : அம்மா அப்பாவுக்கு வணக்கம்.

இருவரும் : அம்பலத்தான் அருளாற், குழந்தாய் நீ எல்லா நலன்களும் நன்கு பெற்று நீடு இனிது வாழ்க!

(இருவரும் புதல்வியுடன் அமர்கின்றனர்)

அரசன் : (புன்சிரிப்புடன்) குழந்தாய், நீ நின் அன்னை யிடத்துத்தான் மிக்க அன்புடையை. எங்களை வணங்கிய போது நீ முதலில் நின் அன்னையைத்தானே குறிப்பிட்டாய்.

அமராவதி : ஆம், அப்பா. ஆறறிவுடைய மக்கனினுந் தாழ்ந்த ஆன்கன்றும் அம்மா என்று தாயைத்தானே அழைக்கின்றது. மக்களின் குழந்தைகளும் முதற்கண் அம்மா என்றுதானே அழைக்கின்றன. பிள்ளைமைப் பருவ முதல் இயற்கையாய் உண்டான அப்பழக்கம் முதற்கண் அம்மா என்று இப்போதும் என்னை அழைக்கச் செய்தது. அதனால் யான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/50&oldid=1580648" இலிருந்து மீள்விக்கப்பட்டது