உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

மறைமலையம் 12

எவராயிருப்பினும் அவரை வரைகடந்து உயர்த்திப் பாடிப் புகழ்ந்து விடுகின்றனர்; அவர் விரும்பியபடி யெல்லாந் தமது பெருமையுங் கருதாது செய்கின்றனர்; மெய்யான தமது சைவ சமயக் கொள்கையினையும் மெல்ல நழுவவிடுகின்றனர்! தம்போன்ற புலவர்க்குப் பிறர் பொருளுதவி செய்யக் கண் டாலும் வயிறெரிந்துவிடுகின்றனர்! திரு வள்ளுவரைப் போல மானங்காத்தொழுகுவார் அரியராய் இருக்கின்றனரே!

அரசன் : ஆமாம், கம்பரும் இக்குற்றங்களுக்கு ஆளா காதவர் அல்லர். என் முன்னோர் தந்தை வாணியன்தாதன் என்னும் பெரும் புலவர்க்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்புச் செய்தபோது, கம்பர் அது கண்டு மனம்பொறாது அப் புலவர்மேல் வசை பாட, அப்புலவருங் கம்பர்மேற் சீற்றங் காண்டு வசை பாடினர். இது புலவர்க்குள் இயற்கை யாய்விட்டது! பிறரைத் திருத்தவல்ல கலைவாணரே தாந்திருந்தாராயின் அவரைத் திருத்தவல்லார் யார்! அது நிற்க, நம் அருந்தவப் புதல்வி அமராவதியை யான் இரண்டு மூன்று நாட்களாய்ப் பார்க்கவில்லை. கன்னி மாடத்திற்குச் சென்று அவளைப் பார்ப்போம் வா. (இருவரும் போகின்றனர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/49&oldid=1580643" இலிருந்து மீள்விக்கப்பட்டது