உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசி :

அம்பிகாபதி அமராவதி

15

ஆம், பெரும! கூத்தர் கல்வியிலுஞ் சிவநேயத் திலும் பிறநற்குணங்களிலுஞ் சிறந்தவரேயாயினும் அவர் நந்தமிழ்ப் புலவர்கள்பால் அழுக்காறு மிக உடையர்; மேலுந் தாம் இளமையாய் இருந்த காலத்தில் தமக்காகாத புலவர் களைக் காளிக்கு வெட்டிப்பலியிட்டாரென்பதை யான் கேட்டது முதல் அவரைக்கண்டாலும் என்னுள்ளம் நடுங்குகின்றது; அத்தகையவர் புலமையிற் சிறந்த கம்பர் பால் மன எரிச்சலின்றி இருப்பரா? கம்பர் நமது புலவர் பேரவையில் இராமாயணத்தை அரங்கேற்றக் கூத்தர் விடாரென்பது தீர்மானந்தான்.

அரசன் : அற்றேல் உனக்கும் எனக்கும் இருந்த ஒரு பெருங்கவலை தீர்ந்ததன்றோ? ஆனாலுங், கம்பர் மனம் புழுங்குமே என்பதனை நினைக்க நினைக்க எனக்கு ஒரு பால் வருத்தமும் உண்டாகின்றது.

அரசி : அதற்கு நாம் என்செய்வது! கம்பர் நல்ல புலவர்தாம். காளிகோயிற் குருக்களாயிருந்து, அம்மைக்குஞ் சிவபெருமானுக்குந் தொண்டுசெய்து, தாம் அரிதிற் பெற்ற மகனுக்கும் அம்பிகாபதி எனப் பெயர் வைத்துச் சைவ வுணர்ச்சி மிகுந்தவராயிருந்தும், அவர் இராமன் கதையைப் பாடியது ஓர் இழுக்கன்றோ?

அரசன் : கம்பர் அது பாடியதன் கருத்து யாதோ! ஒருகால் இவ்வாறிருக்கலாம்; என் பாட்டனார் விக்கிரம சோழர் சிவத்தொண்டிற் சிறந்தவரெனும், வைணவ மதத் திலும் ஈடுபட்டார். அவருக்கு மிக நெருங்கிய தோழரான நம் சடையப்ப பிள்ளையும் அவரது சேர்க்கை யாற்றாமும் வைணவத்தில் மிக ஈடுபட்டுச் 'சரராமன்' என்று ஒரு பட்டப்பெயருந்தாமே சூடிக்கொண்டார். அவரது வேண்டு கோளுக்கு இசைந்தே அவராற் பெரிதும் பேணப் படுங் கம்பரும் இராமாயணம் பாடினார் என்று எண்ணுகின்றேன்.

அரசி : அது மெய்யாயிருக்கலாம். நம் தமிழ்ப் புலவர் களிற் பெரும்பாலார் தமக்குப் பொருளுதவி செய்வார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/48&oldid=1580638" இலிருந்து மீள்விக்கப்பட்டது