உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

❖ LDMMLDMOLD-12 →

முன்னே எனக்கு ஆசிரியராயிருந்தது மல்லாமல், இப்போ தென் அருமை மகள் அமராவதிக்கும் ஆசிரியராயிருந்து தமிழ் கற்பித்துவரல் தாங்கள் அறிந்ததுதானே

கூத்தர் : ஆம், ஆசிரியன் மனம் உவக்க அவன் விரும்பு வன செய்தல் அவன்றன் மாணாக்கர்க்குரிய கடமையேயாம். ஆயினும், நின் முன்னோரின் சிவத்தொண்டும் வழி வழிச் சிறக்க வேண்டுமன்றோ? தன் அமைச்சர் தெய்வச் சேக்கிழாரைக் கொண்டு திருத்தொண்டர் புராணம் பாடுவித்த அநபாய சோழனாம் நின் மூதாதையின் கீர்த்தி இவ்வுலகெலாம் பரவி என்றும் மங்காது விளங்குவ தொன்றன்றோ? சிவ பிரானைக் குறைத்துக் குறும்பாய்ப் பேசிய இராமாநுசரை நின் பாட்டன் குலோத்துங்கன் இச்சோழ நாட்டெல்லையில் இராதபடி செய்ததுந், தில்லை முன்றிலிருந்த திருமால் கோயிலை அவன் பெயர்த்தழித்ததும் அறியாதார் யார்? அத்தகைய சிவத்தொண்டன் கால்வழியிற் பிறந்த நீ அவற்குச் செய்ய வேண்டிய கடமையினையும் நினைத்துப்பார்!

நீ

அரசன் : உண்மை, உண்மை. புலவர் பிரானே, இப் போதியான் இருதலைக்கொள்ளி எறும்பாயினேன். ஒரு பக்கம் என் ஆசிரியரது உள்ளத்தை உவப்பிக்க வேண்டிய கடமை; மற்றொரு பக்கம் என் முன்னோரின் சிவத் தொண்டினைத் தொடர்ந்து நடத்தவேண்டிய கடமை. இவ்விரண்டிலும் யான் வழுவுதல் ஆகாது. இதற்கொருவழி தாங்களே திறப்பித்தல் வேண்டும்.

கூத்தர் : நல்லது, நாளைக்காலையில் நின் அமைச்சர் நம்பிப்பிள்ளையுடன் சூழ்ந்து, செய்ய வேண்டுவதின்ன தென்று தெரிவிக்கின்றேன்; அது பற்றிக் கவலை வேண்டாம்; நீடு வாழ்மின்! (இருவரும் வணங்க எழுந்துபோய் விடு கின்றார்)

அரசன் : (தன் மனைவியை நோக்கி) அங்கயற் கண்ணி, இப்போது நமக்குக் கவலை ஒழிந்தது. கம்பர் தமது இராமா யணத்தை நமது புலவர் பேரவையில் அரங்கேற்ற விடார் கூத்தர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/47&oldid=1580633" இலிருந்து மீள்விக்கப்பட்டது