உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

13

கூத்தர் : ஆம். அவர் அதனை நமது புலவர் பேரவையில் அரங்கேற்ற விரும்புகின்றார். நம் தமையனாரான சடையப்ப வள்ளலும் அதனை அங்ஙனமே செய்விக்க விரும்புகின்றார்.

அரசன் : அவ்வாறு செய்யலாமா என்பதைப்பற்றித் தங்களிடம் கலந்து பேசத்தான் தங்களை இங்கு இவ்வளவு விரைந்து வருவித்தேன்.

கூத்தர் : நல்லது. அதைக் குறித்து நம்மருமைக் குழந்தை அங்கயற் கண்ணியின் கருத்தென்ன?

அரசன் : நாமோ சைவ சமயத்திற் குரியவர்கள், கடவு ளுக்குப் பிறப்பு இறப்புச் சொல்வதை மாணிக்க வாசகர் முதலான நம் சமயாசிரியரோ சிறிதும் ஒப்பாதவர்கள். அங்ஙன மிருக்க, இராமன் என்னும் ஓர் அரசனைத் தெய்வமாக்கிப் பாடிய இராமாயணத்தை நமது நமது பேரவையில் ஏற்றிச் சிறப்பிப்பது தகாதென்று அங்கயற்கண்ணி கருதுகின்றாள். மேலும், வைணவ மதத்திற்குரிய ஒரு நூலைப் பன்மதப் புலவருங் குழுமிய நமது பேரவையில் ஏற்றிக் கேட்பதும் அவர்க் கெல்லாம் வருத்தத் தினைத் தருமெனவுஞ் சொல்கின்றாள். (சொல்லித் தன் மனைவியைப் பார்க்கின்றான்)

அரசி : ஆம்,பாட்டா! கம்பர் தாம் பாடிய இராமாயணக் கதையை அதற்குரிய வைணவப் புலவர் குழுவில் அரங் கேற்றுதலே முறையாகும். தங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்.

கூத்தர்: குழந்தை அங்கயற்கண்ணி கூறுவது முழுதும் ஒப்பத் தகுந்ததே. முன்னமே கண்ணன் கதை நமது தமிழ் நாட்டிற் குடிபுகுந்து நந்தமிழ் மக்களின் முழுமுதற் கடவுள் நம்பிக்கையினை மாற்றிக் கெடுத்துவிட்டது; இப்போது கம்பர் கொணர்ந்திருக்கும் இவ்விராமன் கதையோ அந்நம்பிக்கை யினை இன்னும் பாழாக்கிவிடுமென்பதிற் சிறிதும் ஐயமில்லை. ஆகையால், அதனை நமது புலவர் பேரவையில் ஏற்றிப் பாராட்டுவது நமது நாட்டுக்குப் பெருந் தீங்கினையே விளைவிப்பதாமன்றி மற்றென்னை?

அரசன் : அங்ஙனமாயின், அதனை நமது பேரவையில் ஏறவிடாமற் செய்வதற்கு வழி தெரிவித்தல் வேண்டும். கம்பர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/46&oldid=1580629" இலிருந்து மீள்விக்கப்பட்டது