உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

❖ LDM MLDMOED -12

விக்க இடங்கொடுத்ததிற் புலவர்களுக்குள் உள்ளக்கொதிப்புஞ் சீற்றமும் மிகுந்தன; அது கண்ட பிறகு சமய நூல்களைப் பொதுப் பேரவையில் அரங்கேற்ற விடுவதில்லை; அவைகளை அவ்வச் சமயிகள் குழுவிலேயே அரங்கேற்ற ஒழுங்கு செய்தனர்.

சோழன் : நல்லது. நாமும் அங்ஙனமே செய்யலாமா என்று கேட்டுத் தெளியக் கூத்தரது வருகை உதவி செய்யு மன்றோ?

(கடம்பன் கூத்தருடன் வருகிறான்)

அரசனும் அரசியும் : (இருக்கையை விட்டெழுந்து) புலவர் பெருமானுக்கு வணக்கம்.

அரசன் : ஓய்வு நேரத்திற் றங்களை இங்கு வருவித்த பிழையைப் பொறுத்தருளல் வேண்டும்; அமருங்கள்.

கூத்தர்: நீங்கள் இருவீரும் தேனும் பாலும் போற் பிரிவின்றி நீடு இனிது வாழ்க! குழந்தாய் குலோத்துங்க, எந்நேரமாயிருந்தாலும் உன்னையும் பேர்த்தியையு ங் காண்பதில் யான் மிகுந்த மகிழ்ச்சியுடையேன். இருவீரும் இருக்கையில் அமருங்கள்.

அரசன் : என்

மூதாதைக்குத் தாங்கள் ஆசிரியருந் தெய்வமுமாய் இருந்தீர்கள். எனக்கோ தாங்கள் முதுமை யினால் ஆசிரியராய் இல்லாவிடினும், யான் வழிபடுந் தெய்வ மாகவே யிருக்கின்றீர்கள். ஆகையாற், புலவர் குழுவில் நிகழும் ஏதோரு நிகழ்ச்சிக்கும் அரசியலிற் றோன்றுஞ் சிக்கலான எந்த நிகழ்ச்சிக்குந் தங்களையுந் தங்கள் சூழ்ச்சியையுமே துணை கொண்டு நடந்து வருகின்றேன்.

கூத்தர்: குழந்தாய், அஃதுண்மையே. இப்போதென்னை வருவித்தது எதற்காக? தெரிவி.

அரசன் : நமது புலவர் பேரவையிற் பாவலர் மணியாய் விளங்குங் கம்பர் வான்மீகி இராமாயணத்தைத் தமிழில் மொழி பெயர்த்துப் பெருங்காப்பியமாய்ப் பாடி இருப்பது தாங்கள் அறிந்தது தானே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/45&oldid=1580624" இலிருந்து மீள்விக்கப்பட்டது