உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

11

பெருமானை யன்றி வேறெதனையும் வணங்குவதில்லா நாம் நமது அவையிற் படிக்கக் கேட்டுச் சிறப்பிப்பது?

சோழன் : கண்மணி, அங்ஙனம் அன்று; நமது அரசாட்சி யின் கீழ்ச், சைவர் வைணவர் பெளத்தர் யவனர் துருக்கர் முதலான பற்பல சமயத்தவரும் உயிர்வாழ்கின்றனர். நமது கொள்கை சைவசமயமாயிருப்பினும், யான் அரசன் என்ற முறையில் யில் எல்லாச் சமயத்தவர்க்கும் பொதுவாயிருந்து, அவ்வவருந் தத்தஞ் சமய வாழ்க்கையினை மற்றையோர்க்குத் தீது பயவா வகையில் நன்கு நடாத்திக்கொண்டு வாழத் துணைசெய்ய வேண்டும். ஈது எனது பருங் க மை யாயிருக்கின்றது. நமது புலவர் பேர7ைவயிற் பல மதத்திற் குரியவர்களும் இருக்கின்றனர். அதனால், அவ்வம் மதத்தினர் இயற்றிய நூல்களையும் படிக்கக் கேட்டு, அவை குறைபாடுகள் உள்ளனவாயின் அக்குறைகளைக் களைந்து திருத்தியுங், குறைபாடுகள் இல்லன வாயின் அந் நூல்களைப் பாராட்டியும் அவ்வவர் வரிசைக்குத் தகப் பரிசளித்து வருகின்றேன். ஆகையாற், கம்பரது இராமாயணத்தையும் அரங்கேற்றிக் கேட்டல் நமது அரசியல் முறைக்கு ஒத்ததே யாகும்.

சோழன் மனைவி : பெரும! அது நுங்கள் அரசியல் முறைக்குப் பொருத்தந்தான். ஆனாலும், எல்லா மக்கட்கும் பொதுவான கொள்கைகளைத் தொடுத்துப் புலவர்கள் இயற்றும் நூல்களை மட்டும் நூங்கள் பேரவையில் அரங்கேற்று விப்பதும், அவ்வவர் தத்தஞ் சமயப் பொருள் கோத்து ஆக்கும் நூல்களை அவ்வச் சமயத்தார் கூடுஞ் சமய மன்றங்களில்மட்டும் அரங்கேற்றுவிப்பதும் நல்ல முறை

ஆகாவோ?

சோழன் : நல்லாய்! நீ சொல்வது மிகவும் பொருத்தந் தான். நுங்கள் பாண்டிய அரசவையில் நடைபெறும் முறையி னையே நீ நுவல்கின்றனை போலும்!

சோழன் மனைவி : ஆம், பெருமானே! சமய நூற் கொள்கைகள் ஒன்றோடொன்று நிரம்பவும் மாறுபட்டிருக் கின்றன; அக்கொள்கைகள் உள்ள நூல்களை என் தந்தையார் தமது புலவர் பேரவையில் ஒரோவொருகால் அரங்கேற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/44&oldid=1580619" இலிருந்து மீள்விக்கப்பட்டது