உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

முதல் நிகழச்சி: முதற் காட்சி

களம் : தஞ்சையிற் சோழன் அரண்மனை;

நேரம் : மாலை

சோழன் : ஏ, கடம்பா! கூத்தரிடம் உடனே சென்று யான் நிலாமுற்றத்தே இருக்கின்றேன் என்றும், இப்போதே என்றும்,இப்போதே அவர் தனியே வந்து என்னைக் காண வேண்டும் என்றுந் தெரிவித்து அவரைக் கையோ டழைத்துவா!

கடம்பன்: அப்படியே செய்கின்றேன் வேந்தே!

(வணங்கிப் போய்விடுகின்றான்)

வ்

சோழன் மனைவி : பெரும! அரசியல் முயற்சிகளையுங் கலை நூலாராய்ச்சிகளையும் விட்டு நாம் ஓய்ந்து L மகிழ்ந் திருக்கும் இந்நேரத்திற், புலவர் பெருமான் கூத்தரை இவ் வளவு விரைவாக இங்கே அழைக்க வேண்டுவதேனோ அறிகிலேன்.

சோழன் : கண்மணி, அங்கயற்கண்ணி! நம் புலவர் குழுவில் ஒருமணி விளக்கம் போல் திகழா நின்ற கம்பர் வடமொழி யிலுள்ள வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் மொழி பெயர்த்து ஒரு பெரும்காப்பியமாகப் பாடி இருக்கின்றார். நம் அருமைத் தோழரும் நின்பாட்டனும் ஆன சடையப்ப பிள்ளை அதனை நமது புலவர் பேரவையில் அரங்கேற்ற வேண்டுமென வேண்டிக் கேட்கின்றார். அதைப் பற்றிக் கூத்தருடன் தனியே கலந்து பேச வேண்டுவது இன்றியமையாததாயிருக்கின்றது.

சோழன் மனைவி : என்ன! வடநாட்டரசனான இராமனை ஒரு தெய்வமாக்கிப் பாடிய இராமாயணத்தையா, சிவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/43&oldid=1580614" இலிருந்து மீள்விக்கப்பட்டது