உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

மறைமலையம் 12

அம்பிகாபதி : இந்நிலவுகத்தைவிட எத்தனையோ கோடிமடங்கு பெரிதான பகலவன் மண்டிலம் இங்கிருந்து நோக்கும் நம்மனோர் ஊனக்கண்களுக்கு ஒரு சிறு சிவந்த வட்டம் போற்றோன்றினும், அது தன்னளவில் மிகப் பெரியதோர் உலகமே யாதல் போல நம்மனோர் பொருட்டுத் திருமால் வடிவிற் சிறுத்துத் தோன்றும்

முதல்வன்

தன்னிலையிற் பெருத்த இயல் பினனேயாம்; அதனால் அஃதவன் இறைமைக்கு இழுக்காகாது.

சைவசமயப் புலவர் : அற்றேல், சத்துவ குணத்திற் றோன்றிய முதல்வன், தமோ குணத்திற்றோன்றிய முதல்வ னான உருத்திரனிலுஞ் சிறந்ததவன் என்பதுபடக் கம்பர் இரண்டாவது செய்யிளில் "மூன்றனுள் முற்குணத்தவரே முதலோர்” எனக் கூறியது பிழையன்றோ?

அம்பிகாபதி : தந்தையாயினான் : தந்தையாயினான் ஒருவன் தன் மக்க ளுள் தனக்கே நேரே பயன்படும் ஒரு புதல்வனை உயர்த்தி மற்றைப் புதல்வர்களைத் தாழ்த்திப் பேசுதல் போலத், திருமால் வடிவில் நேரே போந்து இந் நிலவுலகினர்க்குதவிபுரிந்த இறைவனை யுயர்த்தி, அங்ஙனம் நேர்நின்றுதவி புரியாது எட்டா நிலைமையனாய் உருத்திரன் என நின்ற இறைவனை மிகுத்துப் பேசாதுவிட்டனர்; ஆதலால்; அஃதொரு குற்றமாகாது.

நிை

வைணவப் புலவர் : இஃது எங்கள் வைணவமதக் கொள்கையன்று. எங்கள் கொள்கைப்படி திருமாலே முதற் கடவுள்; மற்றை நான்முகன் உருத்திரன் என்னும் இருவருந் திருமாலினுந் தாழ்ந்த சிறு தேவர்களே ஆவர். (அரசனுங் கூத்தருஞ் சைவப் புலவருஞ் சினக்குறி யுடையராகின்றனர்)

அம்பிகாபதி : அற்றேல், வைணவமத ஆழ்வார்களில் ஏனையோரைவிட மெய்யுணர்வில் மிக்கவருங் காலத்தால் முற்பட்டவருமான பொய்கை யாழ்வாரும் பேயாழ்

வாரும்.

“பொன் திகழும் மேனிப் புரிசடையம் புண்ணியனும் நின்றுலகந் தாய நெடுமாலும் - என்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/67&oldid=1580669" இலிருந்து மீள்விக்கப்பட்டது