உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அம்பிகாபதி அமராவதி

இருவரங்கத் தால் திரிவ ரேனும் ஒருவன் ஒருவனங்கத் தென்றும் உளன்

என்றும்,

“தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவுஞ் சக்கரமும் சூழ்அரவும் பொன்ஞாணுந் தோன்றுமால் - சூழுந் திரண்டருவி பாயுந் திருமலைமேல் எந்தைக்கு இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து”

என்றும்

35

முறையே பாடிச் சிவபெருமானையுந் திருமாலையும் உயர்வு தாழ்வு கருதாது ஒத்த நிலையில் ஒருருவில் வைத்துக் கூறியிருக்கின்றனராதலால், அது வைணவ மதக் கொள்கை அன்றென்பது பொருந்தாது. (அரசனும் அமைச்சரும் அம்பிகாபதியின் விடையை வியந்து மகிழ்கின்றனர்)

சைவசமயப் புலவர் : தீவடிவினனான சிவபிரானுக்கு நீர் வடிவினனான திருமால் ஒரு தேவியே யெனச் சைவ சமயாசிரியர் நால்வரும் அருளிச் செய்திருத்தலால் அதனையே முதலாழ்வார் இருவருந் தழீஇக் கூறினர். அதனால், அது வைணவத்திற்கே யுரிய கொள்கையாதல் யாங்ஙனம்? இம்முதற் பெருங் கொள்கையில் வேறாகாத போது, வைணவத்தைப் பிறிதொரு மதமாக வைத்துரைத்தல் இசையுமா?

வைணவப் புலவர் : முதலாழ்வார் இருவர்க்கும் பின் வந்த நம்மாழ்வார் முதலாயினார் கைக்கொண்ட கொள்கையே எம்மனோர்க்குரிய உண்மை வைணவமாகும். அதனை விடுத்துச், சைவ சமயச் சார்பில் நின்று முதலாழ்வார் பாடியருளிய திருப்பாட்டுகளை எடுத்துக் காட்டி அம்பிகாபதியார் கூறிய விடை எம்மனோர்க் குடம்பாடாகாது.

அம்பிகாபதி : பண்டைக்காலத்தே அதாவது இற்றைக்கு ஆயிரத்திரு நூற்றாண்டுகட்கு முற்பட்ட காலத்தே சைவம் என்றும் வைணவம் என்றும் இருவேறு மதங்கள் இருந் தமைக்குத் தினையளவு சான்றுதானும் இல்லை எல்லாரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/68&oldid=1580670" இலிருந்து மீள்விக்கப்பட்டது