உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

❖ LDMMLDMOLD-12 →

"நீலமேனி வாலிழை பாகத் தொருவனையே" வணங்கியும் வாழ்த்தியும் வழிபட்டு வந்தனர். சைவசமய ஆசிரியரும் முதலாழ்வார் இருவரும் அம்மெய்ந் நெறியிற் கடைப் பிடியாய் நின்றே நம்மனோர்க்கு முழுமுதற் கடவுளுண்மை யினை அறிவுறுத்தினர். அவர்க்குப் பிற்காலத்தில் வந்த வர்களே மதவெறி பிடித்துத் திருமாலை யுயர்த்திச் பெருமானைத் தாழ்த்தி, தம் புன்செயலுக் கேற்ற புராணக் கதைகளைப் பொய்யாகப் புனைந்து கட்டி மதவேற்றுமை யுண்டாக்கிப் பிறவிப்பயனைத் தாமும் இழந்து பிறரும் இழக்கும்படி செய்துவிட்டனர்! இவ்வுண்மையினையே என் தந்தையாரும் இவ்விராமாவதார காவியத்தின் கிட்கிந்தா காண்டம், நாடுவிட்ட படலத்தில்,

சி

66

அரனதிகன் உலகளந்த அரியதிகன் என்றுரைக்கும் அறிவிலார்க்குப், பரகதிசென் றடை வரிய பரிசே போல்" என்று விளக்கமாக நன்கெடுத்துப் பாடியிருக்கின்றார். மேலும், நம்மாழ்வார் சிவபிரானை இழிவாக விடுத்துத் திருமாலையே உயர்வாகப் பிடித்துப் பாடிய கொள்கையினர் என்பதும் உண்மையன்று; அவர்,

“பூத்தள் துழாய்முடியாய் புனைகொன்றையஞ் செஞ்சடையாய்”

என்றும்,

“என் மலைமகள் கூறன்றன்னை... எயில் மூன்றெரித்த வென்றுபுலன் துரந்த விசும்பாளியைக் காணேனோ

என்றும்,

66

"முனியே நான்முகனே முக்கண் அப்பா”

என்றுஞ் சிவபெருமானைப் பலவிடங்களில் அன்பு

துளும்ப வழுத்திக் கடைப்படியாக நின்ற பட்டியல்,

66

அவாவறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி

அவாவற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன்

என்று முடித்துக் கூறியும் இருக்கின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/69&oldid=1580671" இலிருந்து மீள்விக்கப்பட்டது