உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

37

சைவசமயப் புலவர் : அற்றேல், கம்பர், தாம் இயற்றிய இந்நூலுக்கு இராமாவாதாரம் எனப் பெயர் வத்த தென்னை?

அம்பிகாபதி : இந்நிலவுலகில் தீயவர் தொகையுந் தீமை யும் மிகுந்து, நல்லவர் குழுவும் நன்மையும் அளவற்றுக் குன்றுகின்ற காலத்தே, எல்லாம்வல்ல இறைவன் தன்னருட் சயலுக்குத் தக்கார்பால் நின்று தீயாரைத் துடைத்து நல்லாரைப் புரப்பன். ஆதலால், அரக்கரின் கொடுமை பெருகி அறவோரின் பெருமை அருகிய பண்டை நாளில் இறைவன் இராமபிரானைப் பிறப்பித்து அவன்பால் முனைந்து நின்று அரக்கரை அழித்து அறவோரை ஓம்பினன். கட்புலனாகாத இறைவன்செயல் கட்புலனாய்ப் பிறந்த இராமபிரான் என்னுந் தக்கோன்பால் நின்று அவனை இயக்கித் தன் நோக்கத்தினை முடித்தது. ஆகவே, தக்கோனான இராமன் பிறப்பினையும் அதனால் உலகத்திற்குவிளைந்த நன்மையினையுங் கூறுதலின் இக்காப்பியத்திற்கு ‘இராமாவதாரம்' எனப் பெயர் தந்தனர் என் தந்தையார்.

வைணவப் புலவர் : இதுவும் எமது வைணவமதக் காள்கை யன்று. இது சைவ மதக் கொள்கை. இராமபிரான் திருமாலினும் மிக்க கடவுட்டன்மையுடையன் என்பதே எமது கோட்பாடு. கம்பர் இராமனது தெய்வத் தன்மையைப் பற்றிக் கூறிய செய்யுட்களைப் படித்துக் காட்டினால் அவரது கருத்தின் மெய்ம்மை தெற்றென விளங்கும்.

(கம்பர் தமது நூலின் இடையிடையே இராமனது தெய்வத்தன்மையினை நுவன்ற பாடல்களைப் படித்து முடிவாக)

"முளரிமேல் வைகுவான் முருகற் றந்தஅத்

தளிரியல் பாகத்தான் தடக்கை ஆழியான் அளவிஒன் றாவரே யன்றி ஐயமில்

கிளவியர் தனித்தனி கிடைப்ப ரோதுணை"

என்னுஞ் செய்யுளைப் படித்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/70&oldid=1580672" இலிருந்து மீள்விக்கப்பட்டது