உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

❖ LDMMLDMOED -12 →

வைணவப்புலவர் : பளா! பளா! இதுதான் எமது மதம்! மும்மூர்த்திகளுந் தனித்தனியே எம் இராமபிரானுக்கு ஒப்பாக மாட்டா ரென்பதே எமது கொள்கை. இவ்விடத்தே கம்பர் சொல்லியது முற்றிலும் பொருத்தமே.

66

(அரசன், அமைச்சர், சைவப்புலவர் முகஞ் சிவக்கின்றனர்)

என

கூத்தர்: (சீற்றத்துடன் எழுந்து) ஈதென்ன பேதைமை! “பிறவா யாக்கைப்பெரியோன்” என இளங்கோவடிகளாலும், தாயுமிலி தந்தையிலிதான் றனியன் காணே டீ மாணிக்கவாசகராலும், "தந்தையாரோடு தாயிலர் தம்மையே, சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரால், எந்தையார் அவர் எவ்வகையார் கொலோ" எனத் திருஞான சம்பந்தராலும் வழுத்தப்பட்ட முழுமுதற் கடவுளான சிவபெருமான் எங்கே, கோசலையின் வயிற்றிற் கருவாய்த் தங்கிப் பிறந்து தன்னரசை யும் மனைவியையும் இழந்து, அரக்கரொடு பலநாள் வருந்திப் போராடி அகத்தியர் ஈந்த சிவபிரான் வில்லாலுங் கணை யாலும் அவரை மடித்துப், பின் தன் மனைவியாளையும் அரசையும் பெற்று வைகி, நாட்செல்லச் சரயு நதியில் வீழ்ந்து மாண்ட இராமன் எங்கே! இத்தகைய இராமனை மும் மூர்த்தியினுஞ் சிறந்தவன் என்றலினும் மிக்கதொரு மட தாரு மடமை யுண்டோ சொல்லுமின் புலவீர்கள்!

வைணவப் புலவர் : கொள்கைகளைப் பற்றிப் பேசுங் கால் ‘பேதைமை’ ‘மடமை' முதலான வசைச் சொற்களை வழங்கி எதிர்ப் பக்கத்தாரை இகழ்தல் முறையன்று.

என்

கூத்தர்: ‘அரனதிகன் உலகளந்த அரியதிகன் றுரைக்கும் அறிவிலார்க்கு' என்றுரைத்த விடத்து ‘அறிவிலார்’ என்னும் வசைச் சொல்லால் இருபக்கத்தாரையுங் கம்பர் இகழ்ந்து பேசியிருக்கின்றனரன்றோ? யாம் வழங்கிய அவ் விரண்டு சொற்களும் மெய்யறிவில்லாமையைத் தெரி விக்கின்றதாகலின், அவ்வாறு சொல்லியதை ஒரு குற்றமாக எடுத்தலாகாது.

அரசன் : எடுத்த பொருளை விடுத்துச் சொற் குற்றம் பார்த்தல் நன்றன்று. உண்மை உண்மை காணும் வேட்கையுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/71&oldid=1580673" இலிருந்து மீள்விக்கப்பட்டது