உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

39

நிகழ்த்தப்படும் இவ்வழக்கில் தவறி வசைச் சொற்கள் சில வரினும் அவற்றை நீங்கள் பாராட்டலாகாது. ஆயினும், "யாகாவாராயினும் நாகாக்க” என்னுந் தெய்வத் திருக்குறளை நுங்களெல்லார்க்கும் பணிவுடன் நினைப்பூட்டுகின்றேன். அது நிற்க, மும்மூர்த்திகளுந் தனித்தனியே இராமனுக்கு ஒப்பாகார், என்ற கம்பருரை பொருந்துமா? என வினாயதற்கு இன்னும் விடை வந்திலது.

66

அம்பிகாபதி : மன்னர் பிரான் கட்டளைப்படியே அதற்கு யான் அறிந்த விடை கூறுவேன். முளரிமேல் வகுவான்" எனுஞ் எனுஞ் செய்யுளின் கருத்துப் பொருள் என் தந்தையார் கருத்தன்று; அது சுக்கிரீவன் கருத்து. இராவணனாற் கவர்ந்து கொள்ளப்பட்ட சீதை தன் மெய்யினின்றுங் கழற்றி யெறிந்த அணிகலன்களைச் சுக்ரீவன் காணர்ந்து இராமனுக்குக் காட்ட, அவன் அவற்றைக் கண்டு சீதையின் பிரிவை யாற்றானாய் மிக நைந்து உணர்வற்றுக் கீழே விழ அவனைச் சுக்கிரீவன் தாங்கி, அவன் அப்பெருந்துயர் நீங்கி மனக்கிளர்ச்சி கொள்ளுமாறு ‘மும் மூர்த்திகளும் ஒன்று சேர்ந்தால் உனக்கு ஒப்பாவரேயன்றி அவர் தனித் தனியே நினக்கு ஒப்பாகார்’ என உயர்வு நவிற்சியாற் கூறிய புனைந்துரையை என் தந்தையார் கருத்தாகத் துணிதல் தக்கதன்று. (கூத்தரும் அரசனும் மகிழ்ச்சிக்குறி காட்டுகின்றனர்)

ச்

சைவப் புலவர் : சுக்கிரீவன் கருத்தாக அவ்வாறு கம்பர் கூறுதலுங் குற்றமேயாம். மும்மூர்த்திகளுந் தனித்தனியே இராமனுக்கு ஒப்பாகார் என்பதற்கு மேற்கோள் பண்டை சான்றோர் அருளிச் செய்த தமிழ் நூல்களிலாதல் வடநூல் களிலாதல் இருக்கின்றதா? மேற்கோள் காட்டாக்கால் அக்கூற்றுக் குற்றமேயாகும்.

சமணப் புலவர் : (எழுத்து) காணப்பட்ட இவ்வுலகமும், இவ்வுலகத்தியங்கும் உயிர்களுமே நம்பொறி புலன்களாலும் அறிவாலும் அறியப்படுகின்றன. இவற்றின் மேற்பட்ட கடவுள் என்றொரு பொருள் உண்டென்பது எவ்வாற்றானுந் துணியப் படவில்லை. அங்ஙனமிருக்கக் கடவுளென் றொரு பொருள் உண்டென்றும், அக்கடவுளும் ஒன்றா யிராமல், சிவன் மாயன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/72&oldid=1580674" இலிருந்து மீள்விக்கப்பட்டது