உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

மறைமலையம் 12

நான்முகன் என மூவராய் உளரென்றும், மாயனே இராமனாய்ப் பிறக்க அவ்விராமன் மாயனிலும் ஏனையிருவரிலும் ஏற்றம் மிக்கவனென்றும் புகல்வன வெல்லாஞ் சிற்றறிவினாரை ஏமாற்றி, அவர் தம்முட் கலாம் விளைத்து, அவ்வாற்றால் தம் பிழைப்புக்கு வழி செய்து காண்டவர் கட்டிவைத்த குருட்டுக் கதைகளேயன்றி வேறல்ல. அத்தகைய பொய்யை ஒரு காப்பியமாகப் பாடிய கம்பரது செயல், ஒரு முயற் கொம்பின் மேலேறிச் சென்று வான் வெளியில்

ஒப்பாயிருக்கின்றது!

ஒரு மாளிகை கட்டுவதற்கே

ல்லை.

சாக்கியப் புலவர் : (உடனே எழுந்து) கடவுளென்றொரு பொருள் உண்டென்பது எவ்வாற்றானும் அறியப்படாமை போலவே, உயிர் என்று ஒரு பொருள் உண்டென்பதும் எவ்வாற்றானும் அறியப்படவில்லை. இவ்விரண்டின் வேறாக உலகம் என்பதொரு பொருளும் உண்மையில் இல்லாதவற்றை உள்ளனவாகக் கனவின் கண் உணரும் மயக்கவுணர்வே கடவுளும், உயிரும், உலகமும் உண்டென நனவின் கண்ணும் மயங்கியுணர்கின்றது. இம்மயக்கந் தீர்ந்தவழி அம்மூன்று பொருளும் ல்லை யாமென்பதே முடிபு, இல்பொருளான கடவுள் இல்பொருளான இராமன் என்னும் ஓர் உயிராகப் பிறந்த தென்றலும், பிறந்து ல்ெ பாருளான இவ்வுலகின்கண் ல்பொருளான இராவணனைக் கொன்ற தென்றலும், எல்லாம் முழுப்பொய். மேலும், வான்மீகி இராமாயணத்திற்கு முற்பட்ட எமது ‘தசரத ஜாதகம்' இராமன் தென்னாடு போந்ததாக ஏதும் நுவலவில்லை. அவன் கங்கையாற்றங் கரையிலேயே தன் தங்கை சீதையுடன் சிலகாலந் தங்கியிருந்து தன் தந்தை இறந்தபின் தனது நகர்க்கு மீண்டேகிச் சீதையை மணந்து கொண்டு அரசு செலுத்தினான் என்னுமளவே கூறுகின்றது. ஆகவே, ராமாயணங் கூறும் நிகழ்ச்சிகள் அத்தனையும் முழுப் பொய்யும் புரட்டுமேயாகும்; அதனாற் பொய்யான இராமனைப் பொய்யான மும்மூர்த்திகளுந் தனித்தனியே ஒவ்வாரென்பதும் பொய். (இவை பாய். (இவை கேட்டு அவையினர் எல்லாரும் நகைக்கின்றனர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/73&oldid=1580675" இலிருந்து மீள்விக்கப்பட்டது