உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

41

கோமாளி : (அரசனை நோக்கி) மாராசா, எனக்கொரு ஐயுரவு. அதெக் கெஞ்சிக் கேக்கட்டுமா?

அரசன் : கண்டபடியெல்லாம் உளறாமற் சொல்லக் கூடுமானாற் சொல்.

கோமாளி : (சாக்கியப் புலவரைச் சுட்டிக்காட்டி) இந்தச்சாக்கியச்சாமி சொன்னாங்களே கடவுள் இல்லை என்று; அது எப்படியாவது போவட்டும். ஆனா, உயிர் கூட இல்லே என்னாங்களே, அது எப்படி? இதோ நான் இருக்கிறேனே, என்னெக்கூடப் பொய்யின்னு சொன்னா எனக்கு அளுவைவருது (சிறிது அழுகின்றான், எல்லாருஞ் சிரிக்கின்றனர்) மாராசா, நீங்க கூடப் பொய்யா? இந்த ஓலவமெல்லாம் பொய் என்னாங்களே; அப்பிடியானா இந்த இரவைக்கி எனக்குச் சாப்பாடு? அது பொய்யாவாமே பாத்துங்குங்கோ. (எல்லோரும் மிகச் சிரிக்கின்றனர்! சாக்கியப் புலவர் நாணுகின்றனர்)

அரசன் : (நகைத்துக் கொண்டு) ஏடா! துத்தி, சாக்கியப் புலவர் தமது மதக் கொள்கையை எடுத்துச் சொன்னாரே தவிர, உடனே எல்லாம் பொய்யாய் விடுமென்பது அவரது கருத்தன்று; உனக்கு மும்மடங்கு மிகுதியான

உணவு

இன்றிரவு தரச்செய்வோம், அஞ்சாதே; (அம்பிகாபதியை நோக்கி) ஏதும் விடை உண்டோ?

அம்பிகாபதி : சாக்கியப் புலவர் கூறிய தமது மதக் கொள்கை உலக வழக்கிற்கும் நூல் வழக்கிற்கும் ஆன்றோர் மெய்யுணர்விற்குஞ் சிறிதும் பொருந்தியதாயில்லை. அஃது உலக வழக்கிற்கு முழுமாறாதல் இப்போது துத்தி நகைச் சுவை யுண்டாகப் பேசிய சொற்களால் வெட்ட வெளியாய் விளங்கிவிட்டது. இனிக் கடவுளும் உயிரும் உண்டோ இல்லையோ என்னும் ஆழ்ந்த ஆராய்ச்சியில் நாம் இப் போது நுழையவேண்டுவதில்லை. நம் பெருமான் மெய் கண்ட தேவர் தாம் அருளிச் செய்திருக்கும் சிவஞான போதத்திற் கடவுள் உயிர் உலகம் அல்லது பதி பசு பாசம் என்னும் முப்பொருள்களையும் பற்றி ஆராய்ந்துரைக்க வேண்டுவன வெல்லாம் முற்ற ஆராய்ந்து அவற்றின் உண்மையை முடித்துக் கூறியிருக்கின்றார். மற்று, என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/74&oldid=1580676" இலிருந்து மீள்விக்கப்பட்டது