உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

❖ LDM MLDMOED -12 →

தந்தையார் இயற்றியிருக்கும் இராமாவதார காப்பியச் சொற்பொருட் டன்மைகளை ஆராய்தற் பொருட்டுக் குழுமிய இப்புலவர் பேரவையில் அதனை விட்டுப் பிறவற்றை ஆராய்தல் வெறுங் காலப் போக்காகும். இனி, இராமன் என்றோர் அரசன் வடநாட்டில் இருந்தமை, பழைய பௌத்த சமய நூலாகிய ‘தசரத ஜாதகத்திலேயே’ சொல்லப் பட்டிருத்தலின் அவனை இல்பொருளென்றல், பௌத்தர் தம் நூலுக்கே மாறா யிருக்கின்றது. ஆனால், அவன் தென்னாட்டிற் போந்து இராவண னோடு போராடினான் என அது நுவலவில்லையே யெனின்; அவன் தென்னாடு போந்ததாக அந்நூல் நுவலாமையால், அவன் தென்னாடு போந்த செய்தி பொய்யாகக் கருதப்படினும், உள்ளோன் தலைவனாக நிகழாததனை நிகழ்ந்ததாக வைத்து அவன் மேலேற்றி யுரைப்பது இல்லதினியது நல்லது என்று புலவரால் நாட்டப்பட்டதோர் ஒழுக்கமாம்” என்று தெய்வப்புலமை நக்கீரனார் உரையுரைத்தாராகலின், வட மொழியில் வான்மீகி நாட்டிய அப்புனைந் துரையினையே என் தந்தையார் மொழிபெயர்த்துப் பாடினர். அதனால் அதனை தந்தையார் நூலுக்கு ஒரு குற்றமாகக் கூறுதல் அடாது.

66

என்

வைணவப் புலவர் : இராமாயணத்தின் பின் நிகழ்ச்சி பொய் யென்னும் பௌத்தரின் கொள்கையை அம்பிகாபதியார் ஏற்று மொழிதலாலும், இராமன் மும்மூர்த்திகளிலும் மிக்கவன் என்பதனைப் புனைந்துரையென அவர் அங்ஙனமே கூறுத லாலுங் கம்பரியற்றிய வ்விராமாவதார நூலை

வைணவராகிய யாங்கள் ஒப்புக்கொள்ளல் முடியாது.

சைவப் புலவர் : பிறப்பு இறப்பு இல்லா முதல்வனாகிய சிவபிரானைப் பார்க்கிலும் பிறப்பு இறப்பிற்பட்ட ஒரு சிற்றுயிராகிய இராமனை மேலவனாகக் கூறுங் கம்பரது இந்நூல் சைவர்களாகிய எங்களாலும் ஏற்றுக் கொள்ளப் படுதல் இயலாது.

சாக்கியப் புலவர் : கடவுள் உண்டென்பதே பெறப் படாதிருக்கக் கடவுளே இராமனாகப் பிறந்தானென்றலின், கம்பரது இந்நூல் பௌத்தராகிய எங்களாலும் ஒப்புக் கொள்ளப்படுதல் இசையாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/75&oldid=1580677" இலிருந்து மீள்விக்கப்பட்டது