உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

43

சமணப் புலவர் : இதே காரணம் பற்றிக் கம்பராமா யணத்தைச் சமண மதத்தவராகிய மதத்தவராகிய யாங்களும் ஏற்றல் சிறிதுங்கூடாது.

6

கூத்தர் : கம்பர் பாடிய இவ்விராமாவதாரக் கடவுள் வணக்கமே வைணவத்திற்கும் முரணாய்ச் சைவத்திற்கும் முரணாய்ச் சமண் சாக்கியத்திற்கும் முரணாய்க் காணப் படுகின்றது.அம்பிகாபதியார் கூறிய விடைகளோ சைவ சமயக் காள்கைகளோடு ணங்கி அறிவு நுட்பம் வாய்ந் தனவாயிருப்பினும், அவை கம்பர் கருத்தோடு ஒட்டியவை யல்லவென்பது அதனைச் சிறிது நினைந்து பார்ப்பவரும் நன்குணர்வர். ஆகையால், இந்நூலைப் பல்சமயப் புலவரும் ஒருங்கு குழீஇய இப்பேரவையில் எங்ஙனம் கேற்றுவிப்பதென்பது எனக்கு விளங்கவில்லை. இதற்கு மன்னர்பிரானும் அமைச்சருமே முடிவு பகர்தல் வேண்டும்.

அரங்

(அரசன் அமைச்சரை முடிவு கூறும்படி குறிப்பிக்கிறான்)

அமைச்சர் : மாபெரும் புலவீர்காள்! இப்பேரவையில் அமர்ந்திருக்கும் நீவிர் எல்லீரும் ஒரு சமயத் தீராயில்லாமல், ஒன்றோடொன்று ஒவ்வாப் பல்பெருஞ் சமயத்தீராய் இருக்கின்றீர். நும்மிற் பலரும் இதுகாறும் நிகழ்த்திய தடைகளாற் கம்பர் இயற்றிய இவ்விராமாவதார நூல் நும்மில் அம்பிகாபதியாரைத் தவிர மற்றெவராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதாயில்லை. ஆதலால் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்படத்தக்கது. தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்த திருக்குறளைப் போன்றதொரு நூலாக இருத்தல் வேண்டும்.

புலவர் எல்லாரும் : ஆம்! ஆம்! திருக்குறளை யொத்த தொரு பொது நூலே இப்பேரவையில் அரங்கேற்றத் தக்க தாகும்; மற்றைய ஆகா.

அமைச்சர் : அங்ஙனமாயின், ஆசிரியர் கம்பர் தமது இராமாவதார நூலைச் சைவ சமயக் கொள்கைக்கேற்பச் செய்தனராயின் அதனை அவர் தில்லைக்குக் கொண்டு சென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/76&oldid=1580678" இலிருந்து மீள்விக்கப்பட்டது