உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

மறைமலையம் 12

தில்லைவாழ்அந்தணர் தம் அவையில் அரங்கேற்றுதலே செயற்பாலது. அன்றி, அதனை அவர் வைணவ சமயக் கொள்கைக்கேற்பச் செய்து முடித்தனராயின் அதனை அவர் திருவரங்கத்திற்குச் எடுத்துச் சென்று திருமாலடியார் இடையில் அரங்கேற்றுதலே செயற்பாலது. மன்னர்பிரான் கட்டளையாதோ? (அரசனை நோக்குகிறார்)

L

அரசன் : அறிவான் மிக்க சான்றோர்காள்! அமைச்சர் நம்பிப்பிள்ளை கூறுவது எமக்குப் பொருத்தமாகவே காணப் படுகின்றது. ஆசிரியர் கம்பர் இயற்றிய இராமவதார காப்பியத்தின் கடவுள் வணக்கச்செய்யுட்களே நுங்களுள் எவராலும் ஏற்றுக்கொள்ளப்படாமையினை யாம் வருத்தத் துடன் நேரே கண்டேம்; ஆகையால் இந்நூலின் மற்றைப் பெரும்பகுதி முழுதும் நுங்களால் ஏற்றுக்கொள்ளப் படுமோவென ஐயுறுகின்றோம். சமண் சாக்கியப் புலவர்கள் எவருமே இதனை ஏலார்கள் என்பது வெள்ளிடை எஞ்சிய சைவராதல் வைணவராதல் இதனை ஏற்பார்களானால் தனை அவ்விருவரில் ஒருகுழுவினரிடையே அரங்கேற்று வித்தலே வாய்வது, ஆசிரியரது உள்ளக்கிடையாதோ? (கம்பரைப் பார்க்கின்றான்)

கம்பர் : மன்னர் பிரான் திருவுள்ளங் கருதுமாறே யான் ந்நூலை முதலில் தில்லை மாநகர்க்கு எடுத்துச் சென்று அங்கே தில்லைவாழந்தணரிடையில் இதனை அரங்கேற்ற முயல்வேன். அவரதற்கு இடந்தராராயின் பின்னர்த் திருவரங்கஞ் சென்று திருமாலடியார் நாப்பண் இதனைத் திண்ணமாய் அரங்கேற்றி மீள்வேன். யான் இன்னும் ஒரு கிழமையில் இங்கிருந்து புறப்படுதற்கு, அரசர் பெரும! விடையளித்தருளல் வேண்டும்.

அரசன் : அவ்வாறே செய்தருள்க புலவர் பிரானே! (அமைச்சரை நோக்கி) நம்பிப்பிள்ளை! ஆசிரியர் தில்லையுந் திருவங்கமுஞ் சென்று தமது நூலை அரங்கேற்றி வருந் துணையும் அவர்க்காஞ் செலவுகளுக்குச் சிறிதுங் குறை வின்றி நிரம்பப் பொற்றிரளும், ஏவலாட்களும், ஊர்தி முதலியவைகளுங் கொடுத்து வழிவிடுங்கள் (எழுந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/77&oldid=1580679" இலிருந்து மீள்விக்கப்பட்டது