உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

அதிகாரம் - 5 நல்லான்

பிற்பகற்காலம், நேரமோ மிகவும் ஆயிற்று; நிழல்படர்ந்த ஒரிடத்தில் இரண்டுபேர் புல்லின்மேற் சாய்ந்துகொண்டிருந் தார்கள். அவர்களிருவரும் ஒருவரையொருவர் விலகிச் சிறிது தூரத்தில் இருந்தமையால், ஒருவன் மற்றையோனை விடத் தாழ்ந்த நிலையிலுள்ளான் என்பது குறிப்பிக்கப்பட்டதாயிற்று. இருவரும் கள்வர்க்குரிய உடை அணிந்திருந்தனர்; என்றாலும்,. ஒருவன் அணிந்திருந்தது மற்றையோனதைவிட மிக்க விலைபெற்ற தாயிருந்தது. இங்கே இரகசியமாய் வைக்கத்தக்கது ஒன்று மில் லையாதலால், உயர்ந்தவன் என்று சொல்லப் பட்டோன் நல்லானேயன்றிப் பிறர் அல்லர் என்றும், தாழ்ந்தவன் என்று சொல்லப்பட்டோன் இருளனையன்றிப் பிறரல்லர் என்றும் அறிவிக்கின்றோம். மேற்கணவாய் மலைச் சரிவில் இருக்கும் காடுகளின் நடுவே உள்ளே கூடாரத்தில் சந்திரன் என்னும் இளைஞன் ஒருவன் போய்க் கள்வர் தலைவன் ஒருவனைக் கண்டான் என்று முன்னே யாம் கூறியதை இதுபடிப்போர் மறந்திருக்கமாட்டார்கள்; அந்தக் கள்வர் தலைவனே இந்தப் பயங்கரமான நல்லான் என்று அவர்கள் அறிவார்களாக.

இருளன் என்பவனோடு சேர்ந்து நல்லான் இப்போது புல்லின் மேற்சாய்ந்துகொண்டிருக்கும் இந்த இட மானது, மேற்சொல்லிய காட்டுக்கு மிகநெடுந்தூரத்தில் உள்ளது. இவர்களுடைய சுற்று குழற்றுபாக்கிகள் ய சுற்று குழற்றுபாக்கிகள் இவர்கள்பக்கத்திற் கிடந்தன; இவர்களுடைய குதிரைகள் அருகாமையிற் புல் மேய்ந்து கொண்டிருந்தன; இவர்கள் இங்கே தனிமையாக இருப்பதுபோற் காணப்பட்டனர். அடுத்தாற் போல் உள்ள மரங்களின் நடுவிற் கூடாரம் ஏதும் அமைக்கப் படாமையால், இவர்கள் இவ்விடத்தில் நெடுநேரம் தங்கியிருக்கும் கருத்தில்லா தவர்போற் காணப்பட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/103&oldid=1581358" இலிருந்து மீள்விக்கப்பட்டது