உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

குமுதவல்லி நாகநாட்டரசி

73

இளைஞனான நீலலோசனன் தனக்கு அவர்கள் புரிந்த பேருதவிக்காகத் தன் துணைவர் இருவர்க்கும் உளங்கனிந்து வந்தனங்கூறினான். முக்கியமாய் நுண்ணறிவும் எச்சரிக்கையும் பொருந்திய கேசரிவீரன் நடத்தையை அவன் மிகவியந்து கூறினான். அப்பால் தன் கட்டிலின்மேற் துயில்கொள்ளப் போயினான் சுறுக்காக அவனை வந்து கவிந்த உறக்கத்தில் கொள்ளைக்காரர் உருவங்கள் முதன்மை பெற்றுத் தோன்றின; பொன்மயமான மூடுபனியின் ஊடே வஞ்சகியான மீனாம் பாளின் அழகிற் சிறந்த முகமானது தோன்றிக் கரியஇறைக ளோடுங் கூடின பெரிய வாள் விழிகளைத் திறந்து அவனைத் திரும்பவும் நோக்குவன போல் தோன்றின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/102&oldid=1581357" இலிருந்து மீள்விக்கப்பட்டது