உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

மறைமலையம் 13

தப்பிப்போகா வண்ணஞ் செய்து விடுவார்கள் டுவார்கள் என்னும் அச்சத்தினால், அம்மாதரிடத்தில் மரியாதையுள்ளேன் போல நடித்துக்காட்டித் தாங்கள் அளவுக்கு மிஞ்சி மதுபானம் பண்ணி விட்டீர்க ளென்று யான் கருதினேனாகமாத்திரம் அவள் நம்பச்செய்தேன். அவள் ஒரு படுக்கையறையைக் காட்டினாள். நான் படுக்கப்போகும் வரையில் அவள் அங்குதானே நின்று காண் டிருந்தாள். மறுபடியும் யான் வியாக்கிர வீரனிடஞ் சென்று, அவன் செய்ய வேண்டுவன இவையென்று தெரிவித் தேன் என்றான்.

இதன்தொடர்பாக உடனே வியாக்கிரவீரனும் சில சால்லப் புகுந்து “நானும் உடனே சாந்த நோக்கமுள்ளவனான வீட்டுவேலைக்காரனிடம்போய், அவன் ஓரிடத்தில் தனிமையாக வேலைசெய்து கொண்டிருக்கக் கண்டேன். உடனே அவனைப் பிடித்து அமுக்கிக் காலையுங், கையையுங் கட்டிப்போட்டு விட்டு, அவனது இடுப்புக் கச்சையிலிருந்த வாசற்கதவின் சாவிகளை எடுத்துக்கொண்டு வந்தேன்” என்றான்.

அதைத்தொடர்ந்து கேசரிவீரன்: “யான்செய்ய வேண்டு வன வையென்று வியாக்கிரவீரனிடம் சொல்லிய பின் 'சிறிதுநேரத்திற் கெல்லாம், யான் தாங்கள் இருந்த அறைக்கு மெதுவாகப் பதுங்கிக்கொண்டு வந்தேன்; வழியில் அந்தப் பெண்ணைச் சந்தித்தேன். என்னைப்போலவே அவளும் தங்களறைக்கு வந்து கொண்டிருந்தாள் என்று தோன்றியது. ஒருநொடிப்பொழுது அவள் தடுமாற்றம் உடையளாய்க் காணப்பட்டாள்; வியாக்கிரவீரன் கோபுரக் கதவுகளின் திறவுகோல்களை அகப்படுத்திக் கொண்டான் என்பது எனக்கு நிச்சயமாய்த் தெரிந்தமையால், என்னுடைய உபாயம் செய்து முடித்ததற்குப் பக்குவமுடையதெனக் கண்டேன். அதன்மேல் அப்பெண் எனது சிறையிலகப்பட்டாள் என்பதனை அவள் அறியச்செய்தேன். உடனே அவள்தன் வாயால் உரத்துக் கூவத்தொடங்கியபோது, என் கையால் அவள் வாயைப் புதைத்தேன். அதே சமயத்தில் வியாக்கிர வீரனும் அங்குவந்து சேர்ந்தான்; உடனே அவளை அவன் வசம் ஒப்பித்தேன்; அதன்பிறகு தாங்களிருந்த அறையினுட் புகுந்து, தாங்கள் அமிழ்ந்திக்கிடந்த பெருமயக்கத் தினின்றுந் தங்களை எழுப்பி னேன். அப்பால் நடந்தனவெல்லாம் தாங்கள் அறிவீர்கள் என்று கூறினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/101&oldid=1581356" இலிருந்து மீள்விக்கப்பட்டது