உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

71

தொடவேண்டாமென்று வியாக்கிர வீரன் காதிற்கு குசுகுசு வென்று சொல்லிவிட்டேன். அந்தப் பெண்களோ வென்றால் அவற்றைப்பருகும்படி எங்களைக் கட்டாயப் படுத்தினார்கள். நாங்கள் அவற்றை உண்ணோம் என்று மறுத்துவிட்ட போது, அப்பெண்கள் ஏதுகாரணத்தால் என்று வினவுவது போலத் தம்மில் ஒருவரை ஒருவர் விரைந்து நோக்கியதை யான் கண்டு கொண்டேன். இங்ஙனம், ஏதோ இரண்டகம் நடக்கப்போகிற தென்று கொண்ட என் சந்தேகம் வலுப்படுவ தாயிற்று. கடைசி யாக அந்தப் பெண்கள் தங்கள் தங்கள் அறையிற்படுக்கப் போனார்கள்; அவர்கள் அப்படிப் போன பிறகு வியாக்கிர வீரனிடம் என் சந்தேகங்களையும் அவற்றின் காரணங்களையும் எடுத்துக் கூறினேன். அதன்மேல், நாங்கள் காவலாய் விழித்திருக்க இசைந்தோம்; அப்பால் குதிரையைப் பார்க்கிறதற் கென்று சாக்குக்காட்டிக் கோபுரத்துள் நடக்கப் போவதை யெல்லாம் கண்டறிய அங்கேயுள்ள முற்றத்திற்குப் போனேன். குதிரை லாயத்தில் ஒருவிளக்கு எரிந்து கொண்டிருந்தது; அதன் கிட்டப்போனபோது சிலர் பேசிய சத்தங்கேட்டது. யான் அஃதென்னவென்று உற்றுக் கேட்டேன். சாந்த நோக்கமுள்ள அவ்விடத்துவேலைக்காரன் குதிரைக்காரனிடம் பேசிக்

கொண்டிருந்தான். அவர்கள் பேசுவதிலிருந்து போது மான அளவுக்கு யான் ஒன்றுந்தெரிந்துகொள்ளக் கூடவில்லை. ஆயினும், யாங்கள் ஒரு சூழ்ச்சியில் அகப்படுத்தப்பட்டே. மென்றும், இருளன் என்னும் பெயருள்ள யாரோ ஒருவன் மிகவும் விரைவாகக் குதிரைஏறி நல்லான் இருப்பிடங்களில் ஒன்றை நோக்கிப் போயினானென்றும், அவனுடைய கொள்ளைக் கூட்டத்தாரின் ஒரு பிரிவு சிறிது நேரத்தில் அந்தக் கோபுரத்திற்கு வருமென்றும் மாத்திரம் யான் தெரிந்து கொள்ளக்கூடிய அளவு அதனினின்று கிரகித்தேன். உடனே யான் வியாக்கிரவீரனிடம் திரும்பி வந்ததும் யாங்கள் விரைவிற் செய்யவேண்டுவன இவையென்று தீர்மானித்தேம் வரப் போகும் மோசத்தைப்பற்றித் தாங்கள் உடனே அறிவிக்கப்படுதல் வேண்டும். யான் விருந் தாட்டறைக்கு ஏறிவந்து, பெருமானே, தாங்கள் அந்தமாய வித்தை யினுள் அகப்பட்டிருத்தலைக் கண்டேன்." யானே எல்லா வற்றையுஞ் சந்தேகித்தேன் என்னும் படியாய்ச் செல்வேனானால் அங்கே உள்ளார்க்குச்சந்தேகம் பிறந்து தீப்பந்தம் முதலான குறிகளாலே கள்வர் கூட்டத்தைச் சடுதியில் வருவித்து நாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/100&oldid=1581355" இலிருந்து மீள்விக்கப்பட்டது