உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

மறைமலையம் 13

அவ்வாறே பருகினாள்; எனினும், அக்காட்டுமதுவை யான் பருகிய பின்னரேதான் என் பகுத்தறிவு குழம்பலாயிற் றென்ப தனை இப்போது நினைவு கூர்கின்றேன்.” என்று மறுமொழி புகன்றான்.

66

இம்மேற்கணவாய் மலைப்பக்கங்களில் தேனீக்கள் மயக்கந் தரும் தேனையே பூக்களினின்றும் உறிஞ்சுதலால், அத்தகைய தேனானது மனிதருடைய மூளையை மயங்கச் செய்வது ஒரு வியப்பன்று!" என்று கேசரிவீரன் கூறினான்.

"இவ்விரகசியத்தின் அந்தப்பாகம் இப்போது விளங்கியது. கபடமுள்ள அந்தப் பெண்ணானவள் இம்மதுவை மிகுதியாக உண்ணும்படி என்னைக் கட்டாயப்படுத்தினாள். விருந்தோம்பு வாள் போல என்னை அவ்வளவு தந்திரமாகத்தான் செய்யுங் காரியங்களுக்கு உடம்படுத்தினாள். தயைசெய்து கேசரி வீர மற்றுஞ் சொல்ல வேண்டுவதைச் சொல்" என்றான் நீலலோசனன்.

நன்றியுள்ள

அத்துணைவன்

முன்விட்டதிலிருந்து திரும்பவும் சொல்லப்புகுந்து “மாட்சிமை நிறைந்ததாங்கள் அந்தப்பெண்மேல் நிரம்பவுங் காமுற்றதாக எண்ணினே னாயினும், குதிரைகள் தீனியூட்டப்பட்ட குடிசையினின்றும் நாம் வந்த பிறகு தங்களுடன் அந்தரங்கமாகப் பேசுவதற்குப் பலமுறை முயன்றேன்.. அஃதொன்றும் பயன்படாமற் போயிற்று. உண்மை சொல்லு மிடத்துத் தங்களுடன் பேசுவதற்கு இடம் வாய்த் தாலுங்கூட, அதனால் ஏதும் பயன்விளையா தென்றே அஞ்சி னேன்; ஏனென்றால்,யான் சந்தேகப்படுதலைப் பற்றித் தாங்கள் தங்கட்கு வழக்கமாயுள்ளபடி உல்லாசமாக நகையாடி விடுவீர் களென்றும், நல்லானுடைய குதிரை அம்மாதரிடம் வந்த தற்குப் பலவகையான காரணங்கள் கற்பித்துக் கூறுவீர் ளென்றும் கருதினேன். எப்படியாயினும், ஒவ்வொன்றையும் கவனித்துச் சாக்கிரதையாயிருப்பதற்குந் தீர்மானித்தேன்.நாமும் அந்தக் கோபுரத்தில் வந்து சேர்ந்தோம். தாங்களும் அந்த மாதும் அங்கே விருந்தாட்டறைக்குப் போயினீர்கள். வியாக்கிர வீரனும் யானும் அம்மாதின் தோழிமார்களோடு விருந்துண்டு இருந் தோம். நாங்கள் உணவருந்தும்போது திராட்சப்பழரசமும் காட்டுத்தேனும் எங்கட்கும் கொண்டு வந்து வைக்கப்பட்டன. ஆயினும், யான் சமயம் வாய்த்தது கண்டு அவ்விரண்டையுந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/99&oldid=1581354" இலிருந்து மீள்விக்கப்பட்டது